Home
Mobile

மிகவும் குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும் லாவா

By Karthikeyan
மிகவும் குறைந்த விலையில் ஆன்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும் லாவா

லாவா மொபைல் நிறுவனம் சமீபத்தில் மிகவும் குறைந்த விலையில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய போனிற்கு ஐஆர்ஐஎஸ் என்320 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போன் ரூ.3,999க்கு விற்கப்பட இருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் வரும் இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

இந்த புதிய போன் டூவல் சிம் வசதியுடன் வருகிறது. அதோடு இந்த போன் 3.5 இன்ச் அளவில் ஒரு கப்பாசிட்டிவ் மல்டி டச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதோடு இது ஆன்ட்ராய்டு 2.3.6 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வருவதால் பலரும் இந்த போனை விரும்புவர் என்று நம்பலாம். மேலும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது மிகவும் வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

இந்த ஆன்ட்ராய்டு போன் பின்பக்கம் எல்இடி ப்ளாஷ் கொண்ட 2எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த போனில் முகப்பு கேமரா இல்லை. அதுபோல் இந்த போனில் 3ஜி சப்போர்ட்டும் இல்லை.

இணைப்பு வசதிகளுக்கா இந்த போனில் 2ஜி, எட்ஜ், ஜிபிஆர்எஸ், வைபை மற்றும் ப்ளூடூத் ஆகியவை உள்ளன. மேலும் பதிவு செய்யும் வசதி கொண்ட எப்எம், கிராவிட்டி சென்சார் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவற்றையும் இந்த போன் கொண்டிருக்கிறது.

அதோடு இந்த போன் 256எம்பி ரேம் மற்றும் 100எம்பி மெமரி ஆகியவற்றுடன் வருகிறது. இதன் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி அளவிற்கு விரிவு செய்ய முடியும்.

இந்த லாவா போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வருகிறது. அதோடு ரூ.3999க்கு ஆன்ட்ராய்டு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது. பிலிப்கார்ட் ஆன்லைன் மூலம் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X