ரூ.7799-க்கு இப்படி ஒரு போன்-ஆ! இதை வாங்க 1 இல்ல.. 9 காரணம் சொல்லலாம்!

|

பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்கள் என்றாலே அது மட்டமான மாடலாகத்தான் இருக்கும் என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது!

இப்போதெல்லாம் ரூ.8,000 - ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் போன்களை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அந்த பட்டியலில் சேர்ந்துள்ள ரூ.7,799 ஸ்மார்ட்போன்!

அந்த பட்டியலில் சேர்ந்துள்ள ரூ.7,799 ஸ்மார்ட்போன்!

நாம் இங்கே பேசும் ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் - லாவா யுவா ப்ரோ (Lava Yuva Pro) ஆகும்.

ரூ.8,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் "விலையை மீறிய அம்சங்களை" பேக் செய்கிறது என்றே கூறலாம்!

அதென்ன அம்சங்கள்? இந்த ஸ்மார்ட்போன் எதன் வழியாக வாங்க கிடைக்கும்? இதை வாங்குவதற்கான 9 காரணங்கள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!ரூ.30,000 பட்ஜெட்டில் புது iPhone.. அதுவும் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன்!

Lava Yuva Pro-வின் இந்திய விற்பனை

Lava Yuva Pro-வின் இந்திய விற்பனை

லாவா யுவா ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 3ஜிபி ரேம் + 32ஜிபி ஆகும்; இதன் விலை ரூ.7,799 ஆகும்.

இது மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் மெட்டாலிக் கிரே என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும். தற்போது இது லாவா இ-ஸ்டோர் (Lava e-store) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

விலையை மீறிய டிசைன்.. பெரிய டிஸ்பிளே..!

விலையை மீறிய டிசைன்.. பெரிய டிஸ்பிளே..!

உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா இன்டர்நேஷனலின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன யுவா ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 720x1,600 பிக்சல்களை வழங்கும் 6.51 இன்ச் என்கிற அளவிலான HD+ ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது மற்றும் செல்பீ கேமராவை வைக்க வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச்சையும் கொண்டுள்ளது!

கேமரா போன்களின் கிங்.. வர்றார்! வர்றார்! ஒன்பிளஸ், சாம்சங் லாம் ஓரம்போங்க!கேமரா போன்களின் கிங்.. வர்றார்! வர்றார்! ஒன்பிளஸ், சாம்சங் லாம் ஓரம்போங்க!

விலைக்கு ஏற்ற ப்ராசஸர்!

விலைக்கு ஏற்ற ப்ராசஸர்!

இந்த புதிய Lava ஸ்மார்ட்போன் ஆனது MediaTek Helio SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அது 3GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொதுவான தேவைகளுக்கான.. போதுமான கேமரா!

பொதுவான தேவைகளுக்கான.. போதுமான கேமரா!

கேமராக்களை பொறுத்தவரை, லாவா யுவா ப்ரோ ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

இதன் ரியர் கேமரா செட்டப்பில், HDR, போர்ட்ரெய்ட், ப்யூட்டி, நைட், GIF மற்றும் டைம்லாப்ஸ் போட்டோகிராஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் மற்றும் பில்டர்கள் உள்ளன.

செல்பீக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்கு, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது; அது ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவையும் பெறுகிறது.

உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

போதும்.. போதும்னு ஸ்டோரேஜ்!

போதும்.. போதும்னு ஸ்டோரேஜ்!

இந்த லாவா ஸ்மார்ட்போனில் 32ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. அதை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.

டூயல் சிம் (நானோ) ஆதரவு கொண்ட லாவா யுவா ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

சிக்கல் இல்லாத செக்யூரிட்டி!

சிக்கல் இல்லாத செக்யூரிட்டி!

இந்த ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது மற்றும் சுவாரசியமாக பேஸ் அன்லாக் (Face unlock) அம்சத்தையும் ஆதரிக்கிறது.

கனெக்டிவிட்டி விருப்பங்களை பொறுத்தவரை, Lava Yuva Pro ஆனது 4G, ப்ளூடூத் v5, எஃப்எம் ரேடியோ, வைஃபை 802.11 b/g/n/ac, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஆர்எஸ், ஓடிஜி மற்றும் யூஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!இந்திய மக்களுக்கு இன்னொரு தீபாவளி பரிசு! எல்லாம் 5G வந்த நேரம்!

"வெயிட்டான" பேட்டரி!

லாவா நிறுவனம் அதன் புதிய யுவா ப்ரோ ஸ்மார்ட்போனில் 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி 37 மணிநேர டால்க் டைமையும், சிங்கிள் சார்ஜில் 320 மணிநேரம் வரை ஸ்டேன்ட்பை டைமையும் வழங்கும்.

கடைசியாக, அளவீட்டில் இது 164.4x75.8x8.9மிமீ மற்றும் எடையில் 191 கிராமும் உள்ளது.

இதுக்கு மேல வேற என்ன வேணும்?

இதுக்கு மேல வேற என்ன வேணும்?

பட்ஜெட் விலை, 3 கலர் ஆப்ஷன்கள், விலையை மீறிய டிசைன், பெரிய டிஸ்பிளே, நல்ல ப்ராசஸர், தேவைக்கான கேமரா, போதுமான ஸ்டோரேஜ், நல்ல செக்யூரிட்டி, பெரிய பேட்டரி.. இப்படியாக இந்த ஸ்மார்ட்போனை வாங்க 1 காரணம் அல்ல, மொத்தம் 9 காரணங்கள் உள்ளன!

ஆகமொத்தம்.. வெறும் ரூ.7.799 க்கு இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? நீங்களே சொல்லுங்களேன்!

Photo Courtesy: Lava

Best Mobiles in India

English summary
Lava Introduced New Budget Price Smartphone Yuva Pro At Rs 7799 in India Check Full Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X