யாரு சாமி அவன்.. ரூ.14,749 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் லாவா நிறுவனமானது, லாவா ஃபெஸ்டிவல் சீசன் விற்பனை 2024 (Lava Festive Season Sale 2024) மூலம் 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன்களுக்கு நம்ப முடியாத தள்ளுபடியை கொடுக்கிறது. ஆகவே, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) மற்றும் லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) போன்கள் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் விற்பனையாகின்றன. இந்த போன்கள் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா பிளேஸ் கர்வ் 5ஜி அம்சங்கள், விலை (Lava Blaze Curve 5G Specifications Price): இந்த லாவா போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 மற்றும் 15 அப்டேட் கிடைக்கிறது. 64 எம்பி மெயின் கேமரா (சோனி சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா வருகிறது.
32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. அயர்ன் கிளாஸ் (Iron Glass), விரிடியன் கிளாஸ் (Viridian Glass) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது.
இப்போது, லாவா ஃபெஸ்டிவல் சீசன் விற்பனையை முன்னிட்டு அமேசான் தளத்தில் வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,749 பட்ஜெட்டில் இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட லாவா பிளேஸ் கர்வ் 5ஜி போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
லாவா பிளேஸ் எக்ஸ் அம்சங்கள், விலை (Lava Blaze X Specifications Price): இந்த எக்ஸ் மாடலிலும் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உள்ளது.

இந்த எக்ஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. இந்த மெயின் கேமராவிலும் சோனி சென்சார் பேக் செய்யப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது. ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது.
இந்த போனும் லாவா ஃபெஸ்டிவல் சீசன் விற்பனையை முன்னிட்டு எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த லாவா பிளேஸ் எக்ஸ் மாடலையும் வெறும் ரூ.14,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அமேசான் விற்பனையில் இந்த லாவா போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications