Subscribe to Gizbot

ரூ.4,000ல் நவீன வசதிகளுடன் புதிய லாவா போன்!

Posted By: Staff

ரூ.4,000ல் நவீன வசதிகளுடன் புதிய லாவா போன்!
பட்ஜெட் மொபைல்போன்களை வெளியிடுவதில் லாவா முன்னிலை வகிக்கிறது. அந்த நிறுவனம் இதுவரை வெளியிட்ட அனைத்து மொபைல்போன்களும் விற்பனையில் நல்ல எண்ணிக்கை பதிவு செய்து வருகின்றன.


இந்த வரிசையில் புதிய மொபைல்போனை லாவா வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த மொபைல்போனை எம்டிவியின் கூட்டணியில் லாவா மார்க்கெட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

ஏ-16 எம்டிவி என்ற குறியீட்டு பெயரில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த புதிய மொபைல்போன் இளைஞர்களை கவரும் வகையில் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பார் போன் மாடலில் வடிவமைப்பை பெற்றுள்ளது.

இதன் பின்புறத்தில் கேமரா மற்றும் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எளிதாக டைப்பிங் செய்யும் வகையில் பெரிய எழுத்துக்களுடன் கூடிய ஆல்பா நியூமரிக் கீபேட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் யூஸர் இன்டர்பெஸ் அப்ளிகேஷன்களை எளிதாக இயக்குவதற்கு உதவுகிறது. இந்த போன் 2.6 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது. இது மிக பிரகாசமாகவும், துல்லியமாகவும் இருக்கிறது.

இதில், அதிக துல்லியம் கொண்ட கேமராவுடன், யமஹா ஆடியோ சிஸ்டத்தையும் பெற்றிருப்பதால் பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவாக தரும். இதன் இயர் போன்கள் எஸ்ஆர்எஸ் வாவ் சவுண்ட் எஃபெக்ட் தொழில்நுட்பத்துடன் வருவதால் துல்லியமான இசையை கேட்கலாம்.

இந்த புதிய மொபைல்போன் ரூ.4,000 விலையில் மார்க்கெட்டிற்கு வந்துள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot