Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.13,999 பட்ஜெட்ல LAVA 5G போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 (Amazon Great Indian Festival 2026) என்னும் சிறப்பு விற்பனையில், 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா உள்ளிட்ட பீச்சர்களுடன் வெளியாகிய லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி (Lava Bold N4 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, அமேசான் விற்பனையில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.13,999 பட்ஜெட்ல LAVA 5G போன்.. மாடல்?

லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Bold N4 Pro 5G Specifications): லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் அளவிலான எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1612 x 720 பிக்சல்கள் மற்றும் எச்டி பிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்டுள்ளது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் எச்பிஎம் (HBM) பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது.

குறிப்பாக, பட்ஜெட் விலைப் பிரிவில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இதன் மூலம் ஸ்க்ரோலிங், அனிமேஷன் உள்ளிட்டவற்றை ஸ்மூத் ஆக பயன்படுத்த முடியும். மேலும், வீடியோ, சோஷியல் மீடியா மற்றும் பிரவுசிங் போன்ற டெய்லி யூஸேஜுக்கும் இந்த டிஸ்பிளே ஓரளவு நல்ல அனுபவத்தை வழங்கும்.

சிப்செட்டைப் பொறுத்தவரை, லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் யுனிசோக் டி8200 6என்எம் (Unisoc T8200 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் சார்ந்த பணிகளுக்காக மாலி ஜி57 எம்சி2 (Mali G57 MC2) ஜிபியு வழங்கப்பட்டுள்ளது. எனவே, டெய்லி யூஸேஜ், சோஷியல் மீடியா, பிரவுசிங் மற்றும் மல்டிடாஸ்கிங் போன்றவற்றில் ஓரளவு நல்ல பர்ஃபாமென்ஸ் கிடைக்கும்.

சாப்ட்வேர் சார்ந்த விஷயங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இயங்குகிறது. மேலும், இதில் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு சிம்களை பயன்படுத்தலாம் அல்லது ஒரு சிம் உடன் மெமரி கார்டை பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்லாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போனில் உள்ள ஸ்டோரேஜ் போதுமானதாக இல்லாதபோது கூடுதல் ஸ்டோரேஜை பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அதிக போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை சேமித்து வைக்கும் யூசர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 2K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. செல்பீ, வீடியோ கால்களுக்காக 8எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் 50எம்பி மெயின் கேமரா கிடைப்பதால், அதற்கு ஏற்ப அவுட்புட் கிடைக்கும்.

செக்யூரிட்டி வசதிக்காக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனை வேகமாக அன்லாக் செய்துகொள்ள முடியும். மேலும், தூசி மற்றும் ஸ்பிளாஷ்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் IP64 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெய்லி யூஸேஜில் ஏற்படும் தூசி மற்றும் லைட் ஸ்பிளாஷ்களை சமாளிக்க முடியும்.

பேட்டரியைப் பொறுத்தவரை, லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியுடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கிடைக்கிறது. எனவே, நீண்ட நேரம் போனை பயன்படுத்த விரும்பும் யூசர்களுக்கு இந்த 6000mAh பேட்டரி நல்ல பேட்டரி பேக்கப் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் 8.68 மிமீ தடிமனையும், 207 கிராம் எடையையும் கொண்டுள்ளது. குறிப்பாக, 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 8.68 மிமீ தடிமன் மற்றும் 207 கிராம் எடை என்பது இந்த போனின் டிசைன் சார்ந்த முக்கிய அம்சங்களாக உள்ளது. கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை, லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) உள்ளது.

4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மற்றும் வை-ஃபை 802 உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் GLONASS ஆகிய கனெக்டிவிட்டி வசதிகளும் கிடைக்கின்றன. மேலும், சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்ஃபருக்காக யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Bold N4 Pro 5G With 6GB RAM Available At Rs 13999 on Amazon Great Indian Festival 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X