Home
Mobile

செப்.18 க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. புது LAVA ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் போல்டு சீரிஸ் மாடல்களானது, சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு துளியும் குறையில்லாதபடி இருக்கின்றன. டிசைன் தொடங்கி கேமரா மற்றும் பேட்டரியில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி (Lava Bold N4 Pro 5G) ஸ்மார்ட்போன் புதிய வரவாக சேர்ந்துள்ளது.

வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இதனால், மைக்ரோசைட் வழியாக டிசைன் மற்றும் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. லாவா போல்டு என்4 லைட் கடந்த மாதம் வெளியாகியது. இந்த மாதம் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி வெளியாக இருக்கிறது.

செப்.18 க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா!

லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Bold N4 Pro 5G Specifications): 50 எம்பி ஏஐ மெயின் கேமராவுடன் இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி வெளியாக இருக்கிறது. டைட்டானியம் கோல்டு கலரில் கிடைக்க இருக்கிறது. இதுபோக ப்ளூ கலரிலும் வெளியாக இருக்கிறது. 6000mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.

பட்ஜெட்டை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனை பார்க்க வேண்டி இருக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் 9863ஏ (Octa Core UNISOC 9863A) சிப்செட் கொண்ட மாடலாக லாவா போல்டு என்4 லைட் இருக்கிறது. இப்போது, வெளியாக இருப்பது ப்ரோ மாடலாக இருப்பதால் மீடியாடெக் சிப்செட்டை எதிர்பார்க்கலாம்.

6.75 இன்ச் (960 x 540 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை லாவா போல்டு என்4 லைட் கொண்டுள்ளது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டி (HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 16 Go Edition) மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம்.

8 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆகவே, ப்ரோ மாடலில் 50 எம்பி கேமரா கொடுக்கப்பட்டு அப்கிரேட் செய்யப்பட்டு இருப்பது தெரிகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கருடன் (Bottom Ported Speaker) லாவா போல்டு என்4 லைட் வெளியாகி இருக்கிறது.

ஆகவே, லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எதிர்பார்க்கலாம். பட்ஜெட்டை பொறுத்து பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, ப்ரோ மாடலில் 15W அல்லது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 6000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. எம்ஐஎல்-எஸ்டிடி-810-எச் சர்டிபிகேஷன் உள்ளது.

இந்திய மார்கெட்டில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,099 ஆக இருக்கிறது. ஆகவே, லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி மாடலை ரூ.15,000 முதல் ரூ.20,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். பிரீமியம் கேமரா சென்சார் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைத்தால், ரூ.20,000 மேல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அறிமுக சலுகையில் கம்மியாகவும் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Lava Bold N4 Pro 5G With 6000mAh Battery To Launch in India on September 18 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X