அடிச்சான் பாரு லாவா.. ரூ.13,999 பட்ஜெட்ல 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, 5G, IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
சீன நிறுவனங்கள் 5ஜி போன்களின் விலையை உயர்த்தி வரும் நிலையில், இந்திய நிறுவனமான லாவா தொடர்ந்து கம்மி விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி (Lava Bold N4 Pro 5G) போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Bold N4 Pro 5G Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 × 720 பிக்சல்ஸ், 550 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

2.3GHz யுனிசாக் டி8200 6என்எம் (2.3GHz Unisoc T8200 6nm) சிப்செட் உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய லாவா போனில் உள்ளது.
IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance) உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 207 கிராம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மூலம் 2கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ்,யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி போனில் உள்ளன. மிட்நைட் ப்ளூ, லைட்டர் லாவெண்டர், சில்வர் கிரேடியன்ட் ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் 26-ம் தேதி இந்த புதிய லாவா போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications
