வீட்டுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.14,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் பிரீமியம் லுக் கொடுப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் 6000mAh பேட்டரியுடன் வெளியாகிய லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி (Lava Bold N4 Pro 5G) ல்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், ஆர்டருக்கு மேல் ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது.
அமேசான் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 27 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,999 விலைக்கு வாங்கலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது. இதிலும் ரூ.1,125 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கி கொள்ளலாம்.

லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Bold N4 Pro 5G Specifications): 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு டிஸ்பிளே அனுபவம் கிடைக்கும்.
யுனிசோக் டி8200 6என்எம் (Unisoc T8200 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பர்ஃபாமென்ஸ் ஓரளவுக்கு எதிர்பார்க்கலாம். ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) வருகிறது.
மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு 50 எம்பி கேமரா கிடைப்பதால், அதற்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கப்படும்.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP64 ரேட்டிங் கொடுக்கும் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.68 எம்எம் தடிமன் மற்றும் 207 கிராம் எடை கொடுக்கப்பட்டு உள்ளது.
5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) கனெக்டிவிட்டிகளை இந்த லாவா போல்டு என்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
