அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. ரூ.10,000 க்கு மிலிட்டரி கிரேடு.. ஆக 27-க்கு அப்புறம் இதுதான்.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டில் பக்கா டியூரபிலிட்டியுடன் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு ஆகஸ்ட் 27ஆம் தேதி முக்கிய நாளாக இருக்கும். அன்று மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட லாவா போல்டு என்4 லைட் (LAVA Bold N4 Lite) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் லாவா போல்டு என்2 லைட் (LAVA Bold N2 Lite) ஸ்மார்ட்போன் வெளியாகியது. வெறும் ரூ.8,000 பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் கொடுத்தது. ஆனால், ஆகஸ்ட் 27ஆம் தேதி வர இருக்கும் லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனில் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் வருகிறது.

இது மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடல்களுக்கு வழங்கப்படும் சர்டிபிகேஷனாக இருக்கிறது. ஆகவே, இந்த லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனில் மிலிட்டரி கிரேடு டிராப் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ஷாக் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும். பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுத்து இருக்கிறது. கோல்டன் பினிஷிங் கொண்ட பேக் பேனல் மற்றும் மிடில் ஃபிரேம் இருக்கிறது. இந்த விவரங்களுடன் அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், இது ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகும் என்பதை அடித்து சொல்லலாம்.
ஏனென்றால், இது 5ஜி மாடல் கிடையாது. அதேபோல முந்தைய மாடலான லாவா போல்டு என்2 லைட் ஸ்மார்ட்போன் வெறும் ரூ.8,000 பட்ஜெட்டுக்குள் கிடைத்தது. ஆகவே, பெரிய அப்கிரேட்கள் இருந்தாலும், ரூ.10,000 பட்ஜெட்டிலேயே வெளியாகும். இதன் பீச்சர்களை தெரிந்து கொள்ள லாவா போல்டு என்2 லைட் மாடலின் பீச்சர்களை பார்க்க வேண்டும்.
லாவா போல்டு என்2 லைட் அம்சங்கள் (LAVA Bold N2 Lite Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் யூனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core Unisoc SC9863A) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐஎம்ஜி8322 ஜிபியு (IMG8322 GPU) கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த போல்டு என்2 லைட் உள்ளது.
10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.8 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இதில் கிடைக்கும் பெரும்பாலான பீச்சர்களை லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம். ஓஎஸ், சிப்செட் உள்ளிட்டவையில் அப்கிரேட் செய்யப்பட்டு வெளியாகவும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications