சீனாவை நூடுல்ஸ் போட்ட இந்தியா.. ரூ.8,000 பட்ஜெட்ல LAVA போன்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?
சீன நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான பட்ஜெட் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக்கையும் கொடுக்கும்படி லாவா போல்டு என்4 லைட் (Lava Bold N4 Lite) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ரூ.8,000 பட்ஜெட்டுக்குள் கொடுக்க முடிகிற அத்தனை பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
லாவா போல்டு என்4 லைட் அம்சங்கள் (Lava Bold N4 Lite Specifications): 6.75 இன்ச் (960 x 540 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டி (HD) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் 9863ஏ (Octa Core UNISOC 9863A) சிப்செட் கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

பவர்விஆர் ஜிஇ8322 ஜிபியு (PowerVR GE8322 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 16 Go Edition) கொடுத்து இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொடுக்கப்பட்டு உள்ளது. மைக்ரோஎச்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டு உள்ளது.
8 ஜிபி ரியர் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா போல்டு என்4 லைட் கொடுக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
3.5 எம்எம் ஆடியோ ஜேக் (Audio Jack) கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியை கொடுக்கிறது. வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது. யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
5000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. 3 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 3 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. மேலும், 32 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 64 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் பட்ஜெட் மாடல்களில் கிடைக்கும் எம்ஐஎல்-எஸ்டிடி-810-எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கிடைக்கிறது.
மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க இந்த சர்டிபிகேஷன் கிடைக்கிறது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,099 ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் ரூ.7,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எம்பையர் கோல்டு (Empire Gold) மற்றும் கோஸ்டு சில்வர் (Ghost Silver) ஆகிய கலர்களில் இந்த லாவா போல்டு என்4 லைட் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ப்ரீ-ஹோம் சர்வீஸ் கொடுக்கும் மாடலாகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications