Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய Lava போன்.. IP64 ரேட்டிங்.. 5000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

லாவா நிறுவனம் கடந்த வாரம் லாவா போல்ட் என்2 (Lava Bold N2) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் நாளை (பிப்ரவரி 27) முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனை நாளை மதியம் 12 மணி அளவில் அமேசான் தளத்தில் வாங்க முடியும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

லாவா போல்ட் என்2 அம்சங்கள் (Lava Bold N2 Specifications): 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 Hz ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Lava போன்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

தரமான ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core UNISOC SC9863A) சிப்செட் உடன் புதிய லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் IMG8322 GPU கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

13 எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா (AI Dual Rear Camera) அமைப்புடன் லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் புதிய லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) ஓஎஸ் மூலம் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) உடன் லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல்3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), எப்எம் ரேடியோ, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speakers) உள்ளிட்ட பல வசதிகள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 512ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் புதிய Lava போன்.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. இன்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகையும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Bold N2 With 5000mAh battery will go on sale for the first time tomorrow: check price, specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X