Home
Mobile

அமேசான் அதிருது.. ரூ.8,449 ஆஃபர் ரேட்ல Lava போன்.. 5000mAh பேட்டரி.. 10W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

லாவா போல்ட் என்2 (Lava Bold N2) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆஃபர் விலையில் 5000mAh பேட்டரி, 10W சார்ஜிங், 90Hz டிஸ்பிளே, 13 எம்பி கேமரா மற்றும் IP64 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் லாவா ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், சீன நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவை சேர்ந்த லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனமும், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. உண்மையில், சீன நிறுவனங்களுக்கு நிகரான டிசைனை கொடுக்கிறது. பீச்சர்களிலும் பெரிதாக குறையிருக்கவில்லை.

அமேசான் அதிருது.. ரூ.8,449 ஆஃபர் ரேட்ல Lava போன்.. 5000mAh பேட்டரி!

இதனாலேயே விற்பனையிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதில் லாவா போல்டு சீரிஸ் மாடல்களில் சில ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் லாவா போல்ட் என்2 மாடலும் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம் குளோசி பேக் பேனல் கொடுத்து உள்ளது.

இந்த டிசைனில் மிட்-ரேஞ்ச் லுக் கொடுக்கும்படி இன்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மாடலுக்கு அமேசான் (Amazon) தளத்தில் 11 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.8,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் இஎம்ஐ சலுகை கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.80,50 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை கொடுத்து உள்ளது. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை கொடுத்து உள்ளது.

லாவா போல்ட் என்2 அம்சங்கள் (Lava Bold N2 Specifications): வாட்டர் டிராப் நாட்ச் டிசைனில் 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

16 மில்லியன் கலர் டெப்த் கிடைத்து உள்ளது. ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core UNISOC SC9863A) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி8322 ஜிபியு (IMG8322 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. பட்ஜெட் விலை மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) ஓஎஸ் கொண்டுள்ளது. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு கிடைக்கிறது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ரீபோகஸ் (Refocus) மற்றும் மோஷன் போட்டோ (Motion Photo) உள்ளிட்ட மோட்கள் கிடைக்கின்றன.

சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் பேஸ் அன்லாக் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் உள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. டூயல் 4ஜி வோஎல்இடி, ப்ளூடூத் வி4.2, வை-பை 802.11 (Wi-Fi 802.11) மற்றும் ஜிபிஎஸ் (GPS) உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 With 5000mAh Battery 10W Charging 11 Percent Discount on Amazon Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X