Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.8,949 போதும்.. HD+ டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தின் போல்டு சீரிஸ் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) எனும் சிறப்பு விற்பனையில் நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 4ஜி ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான தள்ளுபடி விலைக்கு லாவா போல்டு என்2 (Lava Bold N2) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 ஆனது அக்டோபர் 8ஆம் தேதியில் இருந்து தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறது. இதில் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் ஸ்மார்ட்போன்களை தேடிக் கொண்டிருக்கும் பிரியர்களுக்கு லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் மாடல்கள் பெஸ்ட் ஆப்ஷன்களாக இருக்கின்றன. ஏனென்றால், டிசைனில் பிரீமியம் காட்டுகின்றன.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.8,949 போதும்.. HD+ டிஸ்பிளே.. மாடல்?

இதில் லாவா போல்டு என்2 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மாடலுக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.9,699 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.750 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.8,949 விலைக்கு வாங்கலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் உள்ளது.

லாவா போல்டு என்2 அம்சங்கள் (Lava Bold N2 Specifications): 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே, எச்டி பிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது இந்த லாவா போல்டு என்2 ஸ்மார்ட்போன். வாட்டர் டிராப் நாட்ச் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core UNISOC SC9863A) பிராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் விலைக்கு ஏற்ற வகையில் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வசதியும் இருப்பதால், மொத்தம் 8 ஜிபி ரேம் வரை பயன்படுத்த முடியும். போட்டோக்களை எடுக்க 13 எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் தேவைகளுக்கு 5 எம்பி முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்புக்காக சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வழங்கப்பட்டுள்ளது. இன்டஸ் பிளாக் (Indus Black), சியாச்சின் ஒயிட் (Siachen White) ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், டூயல் சிம் வசதியுடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் (MicroSD Card Slot) இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) இயங்குதளத்தில் இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் செயல்படுகிறது. IP64 ரேட்டிங் பெற்றுள்ளதால், தூசி மற்றும் நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், 5000mAh பேட்டரி, டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகிய வசதிகள் உள்ளன. ரூ.10,000 பட்ஜெட்டுக்கு கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் கஸ்டமர்களுக்கு இந்த லாவா போல்டு என்2 ஒரு தேர்வாக இருக்கும். இதேபோல, லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Bold N2 With 4GB RAM Gets Discount on Amazon Great Indian Festival 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X