Home
Mobile

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 க்கு 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 8GB ரேம்.. 13MP கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட லாவா போல்ட் என்2 (Lava Bold N2) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. மார்கெட் விலையில் இருந்து கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக நம்ப முடியாத விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக இருக்கிறது. இதுவே மலிவு விலையாக இருப்பதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.6,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதலாக டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,999 க்கு 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்!

ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரூ.7,100 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. அமேசான் (Amazon) மற்றும் லாவா ஸ்டோர் (Lava Store) ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இப்போது, கேமரா, டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சிப்செட் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா போல்ட் என்2 அம்சங்கள் (Lava Bold N2 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core UNISOC SC9863A) சிப்செட்டை இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) ஓஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கனெக்டிவிட்டியை பெற்று கொள்ளலாம்.

6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனை, 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. 2.5D கிளாஸ் கொண்ட மாடலாக இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

13 எம்பி ரியர் கேமரா கொடுத்து உள்ளது. இதில் போர்ட்ராய்டு மோட், டைம்லேப்ஸ் மற்றும் ரீபோகஸ் பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ஸ்லோவ் மோஷன், ஆடியோ நோட், மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி மோட், எச்டிஆர் மோட், நைட் மோட் மற்றும் ஏஐ மோட் உள்ளிட்ட பீச்சர்களையும் கொண்டுள்ளது. 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

இன்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) ஆகிய 2 கலர்களில் இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மட்டுமல்லாமல், 256 ஜிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. ப்ளூடூத் வி4.2 (Bluetooth V4.2), வை-பை 802.11 (Wi-Fi 802.11) கனெக்டிவிட்டி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 With 4GB RAM 13MP Camera Sale Under Rs 7000 in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X