பிப்.17 க்கு அப்புறம் இதுதான்.. அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் வருது.. 13 எம்பி கேமரா.. புது LAVA மாடல்!
லாவா நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான லாவா போல்ட் என்2 (Lava Bold N2) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. மேலும், கேமரா, டிசைன், கலர் மற்றும் விற்பனை விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா நிறுவனத்தின் போல்ட் சீரிஸ் மாடல்கள் அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக லாவா போல்ட் என்1 (Lava Bold N1) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் பட்டையை கிளப்பியது. இப்போது, அடுத்த மாடலாக லாவா போல்ட் என்2 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கிரே கலரில் பிரீமியம் லுக் கொடுத்துள்ளது.13 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது. மேலும், செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்த விவரங்களை லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகியது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆகவும் இருந்தது. ஆகவே, லாவா போல்டு என்2 ஸ்மார்ட்போனை ரூ.10,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
அதேபோல பீச்சர்களிலும் பெரிதாக மாற்றம் இருக்காது. ஆகவே, லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa Core UNISOC T765 6nm) சிப்செட்டை இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கிடைக்கிறது. 64 ஜிபி மெமரி மற்றும் 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது.
1 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங்கை இந்த லாவா போல்ட் என்1 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. வாய்ஸ் கால்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்துள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொடுத்துள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உள்ளது. இதேபோன்ற மலிவான பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








