Home
Mobile

மொத்த சாம்ராஜ்யமே அதிருது.. ரூ.7,499 க்கு 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. 8GB ரேம்.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தின் மலிவு விலை மாடலாக லாவா போல்ட் என்2 (Lava Bold N2) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலையிலும் 5000mAh பேட்டரி, 13 எம்பி டூயல் ரியர் கேமரா, 8 ஜிபி ரேம் மற்றும் எச்டிபிளஸ் டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போல்ட் சீரிஸ் கீழ் இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் வருகிறது. ஏற்கனவே, லாவா போல்ட் என்1, லாவா போல்ட் என்1 ப்ரோ மற்றும் லாவா போல்ட் என்1 லைட் ஆகிய மாடல்கள் இந்திய மார்கெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இப்போது, அடுத்த மாடலாக இந்த லாவா போல்ட் என்2 அறிமுகமாகி இருக்கிறது. இதுவும் மலிவாக கிடைக்க உள்ளது.

மொத்த சாம்ராஜ்யமே அதிருது.. ரூ.7,499க்கு 5000mAh பேட்டரி.. 13MP கேமரா!

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. இந்த ஒரே வேரியண்ட் மட்டுமே இப்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் தளத்தில் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனின் விலையை பார்ப்பதற்கு முன்னதாக முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா போல்ட் என்2 அம்சங்கள் (Lava Bold N2 Specifications): 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனை இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும் 90 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து உள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் கிடைத்து உள்ளது. ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core UNISOC SC9863A) சிப்செட்டை கொடுத்து உள்ளது.

இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 4 ஜிபி ரேம் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் அவுட்புட் கொடுக்கப்படும். 13 எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா (AI Dual Rear Camera) கொடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 5 எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) ஓஎஸ் கொண்ட மாடலாக இருக்கிறது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. 5000mAh பேட்டரியை பெற்று கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொடுத்துள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது.

சைடு பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இன்டஸ் பிளாக் (Indus Black) மற்றும் சியாச்சின் ஒயிட் (Siachen White) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களையே பார்க்க முடியாது. டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (MicroSD Card Slot) கிடைக்கிறது.

டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டியை பெற்று கொள்ளலாம். வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆக மட்டுமே இருக்கிறது. வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. அமேசான் மற்றும் லாவா மொபைல்ஸ் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 With 13MP Dual Camera 4GB RAM Launched in India Sale Starts 27th February Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X