Home
Mobile

அதிருது இந்திய மார்க்கெட்.. டூயல் ரியர் கேமரா.. வருகிறது புதிய Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் விரைவில் லாவா போல்டு என்2 (Lava Bold N2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட் தற்போது அமேசானில் வெளியாகியுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

லாவா போல்டு என்2 அம்சங்கள் (Lava Bold N2 specifications): பிளாக் மற்றும் சிலவர் நிறங்களில் இந்த புதிய லாவா போல்டு என்2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 13எம்பி டூயல் ரியர் கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C port), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. மேலும் லாவா போல்டு என்2 போனின் சில அம்சங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லாவா போல்டு என்1 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா போல்டு என்1 5ஜி அம்சங்கள் (Lava Bold N1 5G Specifications): 6.75 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa core UNISOC T765 6nm) சிப்செட் உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டு இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த லாவா போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் 13 எம்பி ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது 4K வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதிருது இந்திய மார்க்கெட்.. வருகிறது புதிய Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

அதுவும் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் உள்ளது.

மேலும் இந்த போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். தற்போது லாவா போல்டு என்1 5ஜி போன் ரூ.7999 விலையில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 to be launched in India soon: Availability confirmed on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X