Home
Mobile

ரூ.7999 க்கு 8GB ரேம், 5000mAh பேட்டரி, IP54, 50MP கேமரா.. சைனீஸ் போன்களை சிதறவிடும் புது LAVA போன்!

இந்திய மொபைல் பிராண்ட் (Indian Mobile Brand) ஆன லாவா (Lava), சூப்பர் பட்ஜெட் விலை பிரிவின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது லாவா போல்ட் என்2 ப்ரோ (Lava Bold N2 Pro) ஸ்மார்ட்போன் ஆகும்.

முக்கிய அம்சங்கள்: இது லாவா நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக (Entry Level Smartphone) இருந்தாலும் கூட 50 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. மேலும் இதில் 5000mAh பேட்டரி உள்ளது. இது யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) வழியிலான 18W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரூ.7999 க்கு 8GB ரேம், 5000mAh பேட்டரி, IP54, 50MP கேமரா!

லாவா போல்ட் என்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் யூனிசாக் டி7250 சிப்செட்டில் (Octa core Unisoc T7250 chipset) இயங்குகிறது. அதாவது இதுவொரு 4ஜி ஸ்மார்ட்போன் (4G Smartphone) ஆகும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜி பிரேம் உடன் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை: லாவா நிறுவனத்தின் படி, லாவா போல்ட் என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும். லாவா போல்ட் என்2 ப்ரோவானது அரோரா கோல்ட் மற்றும் எக்லிப்ஸ் கிரே (Aurora Gold and Eclipse Grey) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

விரிவான அம்சங்கள்: லாவாவின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு டூயல் சிம் (நானோ + நானோ) 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கான அப்டேட்டையும் (Android 16 OS Update), இரண்டு வருட செக்யூரிட்டி அப்டேட்டுகளையும் (Security Updates) பெறும் என்று லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி பேனலை (HD Plus LCD Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி7250 சிப்செட்டை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், பயன்படுத்தப்படாத 4ஜிபி ஸ்டோரேஜை விர்ச்சுவல் மெமரியாக (4GB Virtual Memory) பயன்படுத்தும் விருப்பத்தை (மொத்தம் 8ஜிபி ரேம்) வழங்குவதாகவும் லாவா நிறுவனம் கூறுகிறது. லாவா போல்ட் என்2 ப்ரோவில் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜும் (128GB Internal Storage) கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை லாவா போல்ட் என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா (50MP Rear Camera) உள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா (8MP Selfie Camera) உள்ளது. லாவா நிறுவனத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வைஃபை (Wi-Fi), 4ஜி எல்டிஇ (4G LTE), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய வசதிகளை ஆதரிக்கிறது. கடைசியாக யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் வரும் லாவா போல்ட் என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 18W வரை சார்ஜ் செய்யக்கூடிய 5000mAh பேட்டரி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 Pro With 5000mAh Battery 50MP Camera Launched in India Sale From April 6 Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X