Home
Mobile

செம்ம டிமாண்ட்.. மீண்டும் ரூ.7999-க்கு SALE-க்கு வந்த லேட்டஸ்ட் LAVA போன்.. எந்த மாடல்?

கடந்த மாத இறுதியில் (மார்ச் 31 ஆம் தேதி) இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (Lava) நிறுவனமானது, ஒரு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. அது லாவா போல்ட் என்2 ப்ரோ (Lava Bold N2 Pro) மாடலாகும்.

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அதன் முதல் விற்பனையை சந்தித்தது. அவுட் ஆப் ஸ்டாக் ஆகும் அளவிலான விற்பனையை கண்ட பிறகு, தற்போது இன்று (ஏப்ரல் 23 ஆம் தேதி) மதியம் 12 மணிக்கு மீண்டும் விற்பனைக்கு வருகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அல்லது கடந்த நாட்களில் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இன்று, இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

மீண்டும் ரூ.7999-க்கு SALE-க்கு வந்த லேட்டஸ்ட் LAVA போன்.. எந்த மாடல்?

லாவா போல்ட் என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999 ஆகும். இதை அரோரா கோல்ட் மற்றும் எக்லிப்ஸ் கிரே (Aurora Gold and Eclipse Grey) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க முடியும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் ரியர் கேமரா, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) வழியிலான 18W சார்ஜிங், ஆக்டா கோர் யூனிசாக் டி7250 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), 4ஜி பிரேம் உடன் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை கொண்டுள்ளது.

லாவா போல்ட் என்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: லாவாவின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு டூயல் சிம் (நானோ + நானோ) 4ஜி ஸ்மார்ட்போன் ஆகும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கான அப்டேட்டையும் (Android 16 OS Update), இரண்டு வருட செக்யூரிட்டி அப்டேட்டுகளையும் (Security Updates) பெறும் என்று லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி பேனலை (HD Plus LCD Display) கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட யுனிசாக் டி7250 சிப்செட்டை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், பயன்படுத்தப்படாத 4ஜிபி ஸ்டோரேஜை விர்ச்சுவல் மெமரியாக (4GB Virtual Memory) பயன்படுத்தும் விருப்பத்தை (மொத்தம் 8ஜிபி ரேம்) வழங்குவதாகவும் லாவா நிறுவனம் கூறுகிறது. லாவா போல்ட் என்2 ப்ரோவில் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜும் (128GB Internal Storage) கிடைக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை லாவா போல்ட் என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா (50MP Rear Camera) உள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா (8MP Selfie Camera) உள்ளது. லாவா நிறுவனத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் ஐபி54 ரேட்டிங்கை (IP54 Rating) கொண்டுள்ளது.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வைஃபை (Wi-Fi), 4ஜி எல்டிஇ (4G LTE), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய வசதிகளை ஆதரிக்கிறது. கடைசியாக யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் வரும் லாவா போல்ட் என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் 18W வரை சார்ஜ் செய்யக்கூடிய 5000mAh பேட்டரி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 Pro New Budget 4G Phone Under Rs 8000 Comes to Sale Again in Flipkart Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X