வெச்சான் பாரு Lava.. மட்ட ரேட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 8GB ரேம்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
லாவா நிறுவனத்தில் அடிமட்ட பட்ஜெட் மாடலான லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி (Lava Bold N2 Pro 4G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேமரா, டிஸ்பிளே, பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அதேபோல விற்பனை விவரங்களையும் லாவா மொபைல்ஸ் உறுதி செய்துள்ளது.
வருகிற மார்ச் 31ஆம் தேதி இந்த லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. வழக்கம்போல பிளாப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு களமிறங்க இருக்கிறது. ஆகவே, கேமரா, டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சிப்செட் உள்ளிட்ட பீச்சர்களுடன் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.

லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Lava Bold N2 Pro 4G Specifications): 50 எம்பி டிரிபிள் ரியர் கேமராவை கொடுத்து உள்ளது. 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் டிசைனை கொடுத்து உள்ளது. ஆக்டா கோர் யுனிசோக் டி7250 (Octa Core UNISOC T7250) சிப்செட்டை கொடுத்து உள்ளது.
4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைத்து உள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஐபி54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. எலிப்ஸ் கிரே (Eclipse Grey) மற்றும் அரோரா கோல்டு (Aurora Gold) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
5000mAh பேட்டரியை இந்த லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன. மற்ற பீச்சர்கள் ஓரிரு நாட்கள் வெளியாக இருக்கின்றன.
முன்னதாக வெளியான லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) ஸ்மார்ட்போனின் மார்கெட விலை ரூ.6,799ஆக இருந்தது. ஆகவே, இந்த லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனை ரூ.8,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். இந்த போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிடைத்த மற்ற பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro Specifications): 6.67 இன்ச் எல்சிடி டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் ரெசொலூஷன் உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. இதே பிக்சல் டென்சிட்டி மற்றும் கலர் டெப்த்தை லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம்.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பீ செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் மற்றும் போர்ட்ராய்டு, ஸ்லோவ் மோஷன் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது. 5000mAh லித்தியம் அயன் பேட்டரி மட்டுமல்லாமல், 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதே ஃபாஸ்ட் சார்ஜிங்கை லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி மாடலில் எதிர்பார்க்கலாம்.
இல்லையென்றால், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க வாய்ப்புள்ளது. டிசைனும் கிட்டத்தட்ட ஒரே மாதியாகவே இருக்கின்றன. வித்தியாசம் என்று பார்த்தால், லாவா போல்டு என்1 ப்ரோவில் யுனிசோக் டி606 ஆக்டா கோர் (UNISOC T606 Octa Core) சிப்செட் கிடைக்கிறது. லாவா போல்டு என்2 ப்ரோ 4ஜி மாடலில் ஆக்டா கோர் யுனிசோக் டி7250 சிப்செட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








