அடிச்சு தூக்கிய அமேசான்.. ரூ.8,000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 13MP கேமரா.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் பிரீமியம் லுக் கொடுக்கும்படியான ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பக்காவான தேர்வாக லாவா போல்டு என்2 லைட் (Lava Bold N2 Lite) மாடல் இருக்கிறது. இப்போது, டிஸ்கவுண்ட் விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த லாவா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.8,949 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,199 விலைக்கு இந்த லாவா போல்டு என்2 லைட் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

லாவா போல்டு என்2 லைட் அம்சங்கள் (Lava Bold N2 Lite Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) அளவுள்ள எல்சிடி (LCD) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இது எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. இதனால் பட்ஜெட் விலையில் கிளியர் மற்றும் ஸ்மூத் டிஸ்பிளே அனுபவத்தை பெற்று கொள்ளலாம்.
இந்த போனில் ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core Unisoc SC9863A) சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்காக ஐஎம்ஜி8322 ஜிபியு (IMG8322 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) கொண்டு செயல்படுகிறது. இந்த விலைக்கு ஏற்ற பர்ஃபாமென்ஸை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பட்ஜெட்டுக்கு ஏற்ப கிளியராக எடுக்க 13 எம்பி மெயின் கேமரா ரியரில் இடம்பெற்றுள்ளது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ ஷூட்டர் ப்ரன்ட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) சப்போர்ட் இந்த புதிய லாவா மாடலில் வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் பேக்கப் கொடுக்கும்படி 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி இந்த லாவா போல்டு என்2 லைட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி இருந்தாலும் இந்த போன் 8.8 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், ஆடியோ வசதிக்காக 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) இடம்பெற்றுள்ளது.
தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி இதில் கிடைக்கிறது. கனெக்டிவிட்டி சப்போர்ட்டை பொறுத்தவரை டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) ஆகியவை இந்த லாவா போல்டு என்2 லைட் ஸ்மார்ட்போனில் உள்ளன.
இந்த லாவா போல்டு என்2 லைட் (Lava Bold N2 Lite) ஸ்மார்ட்போன் நீலகிரி ப்ளூ (Nilgiri Blue) மற்றும் கோலார் கோல்டு (Kolar Gold) ஆகிய இரண்டு பிரீமியமான கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. குறைந்த விலையில் நல்ல அம்சங்களுடன் ஸ்மார்ட்போனை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 4ஜி மாடல்களில் பக்காவான டிசைனை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications
