Home
Mobile

மட்ட ரேட்டு சார்.. ரூ.6,499 க்கு 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 90Hz டிஸ்பிளே.. 6GB ரேம்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருக்கும் ஒட்டுமொத்த பேரையும் தூக்கி சாப்பிடும்படி லாவா போல்டு என்2 லைட் (Lava Bold N2 Lite) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. நம்ப முடியாத விலைக்கு 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 90Hz டிஸ்பிளே மற்றும் 6 ஜிபி ரேம் கொடுத்து உள்ளது. இந்த லாவா போல்டு என்2 லைட் ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நிகரான பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் பட்டையை கிளப்பும்படி இந்தியாவின் லாவை மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனமானது, ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இப்போது, ரூ.7,000 பட்ஜெட்டுக்குள் புதிய லாவா போல்டு என்2 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

மட்ட ரேட்டு சார்.. ரூ.6,499 க்கு 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்!

ரூ.15,000 விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் டிசைனை இந்த லாவா போல்டு என்2 லைட் கொடுத்துள்ளது. 3 ஜிபி ரேம் + 3 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுத்து உள்ளது. 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. இப்படி முழு பீச்சர்களும் பட்ஜெட்டில் பட்டையை கிளப்பி இருக்கின்றன.

லாவா போல்டு என்2 லைட் அம்சங்கள் (Lava Bold N2 Lite Specifications): ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி9863ஏ (Octa Core Unisoc SC9863A) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி8322 ஜிபியு (IMG8322 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) ஓஎஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 8.8 எம்எம் தடிமன் கொடுத்து உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) உள்ளது.

லாவா போல்டு என்2 லைட் விலை ( Lava Bold N2 Lite Price): 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,399ஆக இருக்கிறது. ரூ.400 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 2 ஆர்டருக்கு ரூ.500 கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். நீலகிரி ப்ளூ (Nilgiri Blue) மற்றும் கோலார் கோல்டு (Kolar Gold) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அடிமட்ட விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த லாவா போல்டு என்2 லைட் ஸ்மார்ட்போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும். டிசைனும் பட்ஜெட்டைவிட கூடுதல் லுக் கொடுக்கும்படி கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N2 Lite With 3GB RAM 5000mAh Battery Launched in India Sale From April 10 on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X