2 வாங்கினா ரூ.500 டிஸ்கவுண்ட்.. ரூ.6999 க்கு 5000mAh பேட்டரி, 13MP AI கேமரா, 3.5மிமீ ஜாக்.. LAVA அசத்தல்!
இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா, இம்மாத தொடக்கத்தில் (ஏப்ரல் 1) சூப்பர்-பட்ஜெட் விலையில், ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. அது லாவா போல்ட் என்2 லைட் (Lava Bold N2 Lite) மாடலாகும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கியுள்ளது.
லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, இது சமீபத்தில் வெளியிடப்பட்ட லாவா போல்ட் என்2 ப்ரோ () மற்றும் வழக்கமான போல்ட் என்2 மாடல்களுடன் இணைகிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ஆக்டா கோர் யூனிசாக் சிப்செட், 5000mAh பேட்டரி, 10W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு மற்றும் 6.75-இன்ச் டிஸ்பிளே ஆகியவைகளை கொண்டுள்ளது.

லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போனின் விலை, சலுகை மற்றும் விற்பனை: இந்தியாவில் லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,399 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் ரூ.400 கூப்பன் தள்ளுபடியுடன், இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனை ரூ.6999 க்கு வாங்கலாம்.
மேலும் லாவா நிறுவனம் இரண்டு யூனிட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன், அமேசான் இந்தியா (Amazon India) வழியாக வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் லாவா போல்ட் என்2 லைட்டை - கோலார் கோல்டு மற்றும் நீலகிரி ப்ளூ ஆகிய 2 கலர்லளில் வாங்கலாம்.
லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 கோ ஆப்ரேட்டிங் சிஸ்டமின் கீழ் இயங்கும் ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.75-இன்ச் எச்டி பிளஸ் (720x1,600 பிக்சல்ஸ்) நாட்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை, லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் யூனிசாக் 9863ஏ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனையும் கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512ஜிபி வரை விரிவாக்கவும் முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஏஐ டூயல் கேமரா செட்டப்பை கொண்டு உள்ளது. முன்பக்கத்தில் - செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 10W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 4ஜி எல்டிஇ, வைஃபைi, ப்ளூடூத் 4.2, ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது. கடைசியாக லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது. அளவீட்டில் இந்த ஸ்மார்ட்போன் 164.96×76.1×8.8மிமீ மற்றும் எடையில் சுமார் 192 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








