Home
Mobile

ஜூன் 3-க்கு அப்புறம் இதுதான்.. மட்ட ரேட்ல வருது புது LAVA 5G போன்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மாடலாக வெளியாக இருக்கும் லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போனின் அவைலபிலிட்டி உறுதி செய்யப்பட்டு உள்ளது. கூடவே, கலர், டிசைன் மற்றும் ஓஎஸ் விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.

இந்தியாவில் லாவா ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் போல்டு சீரிஸ் மாடல்கள் அடிமட்ட விலையில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. முன்னதாக வெளியான லாவா போல்டு என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போனும் விற்பனையில் தூள் கிளப்பியது.

ஜூன் 3-க்கு அப்புறம் இதுதான்.. மட்ட ரேட்ல வருது புது LAVA 5G போன்!

இப்போது, லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது. வருகிற ஜூன் 3ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. வழக்கம்போலவே அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, டிசைன், கலர் மற்றும் ஓஎஸ் விவரங்களுடன் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது.

ஆகவே, இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ கலரில் வெளியாக இருக்கிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கிடைக்கிறது. குளோஸி பேனலுடன் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இதில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. இந்த மாடலுக்கும் ப்ரீ ஹோம் சர்வீஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த விவரங்கள் மட்டுமே அமேசான் தளத்தில் உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முன்னதாக வெளியான லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொண்டால், ஓரளவுக்கு யூகிக்க முடியும். ஏனென்றால், இதிலிருந்து அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கும்.

லாவா போல்டு என்1 5ஜி அம்சங்கள் (Lava Bold N1 5G Specifications): 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் 6என்எம் யுனிசோக் டி765 (Octa Core 6nm UNISOC T765) சிப்செட் கிடைக்கிறது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. 13 எம்பி ரியர் கேமராவை கொடுத்துள்ளது. இந்த கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கிடைக்கிறது.

டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) IP54 ரேட்டிங் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,499ஆக இருந்தது. ஆகவே, லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Lava Bold N2 5G With Android 16 OS Amazon Availability Confirmed Ahead of Launch on June 3 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X