வீட்டுக்கு 2 ஆர்டர்.. 5G போனுக்கு ரூ.11999 போதும்.. 6000mAh பேட்டரி.. 64GB மெமரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் பிரைம் டே விற்பனையில் (Prime Day Sale) லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 6000mAh பேட்டரியுடன் பிரீமியம் லுக் கொடுக்கும்படி வெளியாகிய லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்போது, பிரைம் டே விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 25 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.11,999 விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.358 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

லாவா போல்டு என்2 5ஜி அம்சங்கள் (Lava Bold N2 5G Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) மற்றும் 2.5டி கிளாஸ் (2.5D Glass) டிசைனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுத்து இருக்கிறது.
இந்த விலையிலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 260 பிபிஐ பிக்சன் டென்சிட்டி கொடுத்து இருக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதில் எச்டி வீடியோ ரெக்கார்டிங் (HD Video Recording) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஸ்கிரீன் ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட 5 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. லாவா ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும். போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
இதுபோக ஆடியோ நோட் (Audio Note), மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி (Beauty), எச்டிஆர் (HDR) மற்றும் நைட் (Night) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம்.
18W சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. டைப்-சி கேபிள் (Type-C Cable) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லித்தியம் அயன் பேட்டரியுடன் 8.75 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடையை கொடுத்து இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி யுனிசோக் டி8200 ஆக்டா கோர் (UNISOC T8200 Octa Core) சிப்செட்டை லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் பேட்டரி சேவர் மோட் (Battery Saver Mode) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. பில்லினியர் ப்ளூ (Billionaire Blue), ரீகல் கோல்டு (Regal Gold) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications