அமேசானில் அதிரடி ஆஃபர்.. லாவா 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போன் மாடல் தற்போது அமேசானில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளியானது. இப்போது லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்2 5ஜி போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா போல்டு என்2 5ஜி அம்சங்கள் (Lava Bold N2 5G specification): சக்திவாய்ந்த ஆக்டா கோர் 6என்எம் யுனிசோக் டி8200 (Octa Core 6nm UNISOC 8200) சிப்செட் உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதுவும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதுவும் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance) உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரியர் கேமரா மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரி உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64ஜிபி வரை மெமரி வசதியுடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ரீகல் கோல்ட் மற்றும் பில்லியனர் ப்ளூ நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லாவா போல்டு என்2 5ஜி போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications