Home
Mobile

செம ஆஃபரில் LAVA 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தின் லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்2 5ஜி போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.11499 விலையில் வாங்கிவிட முடியும்.

செம ஆஃபரில் LAVA  5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

லாவா போல்டு என்2 5ஜி அம்சங்கள் (Lava Bold N2 5G specification): ஆக்டா கோர் 6என்எம் யுனிசோக் டி8200 (Octa Core 6nm UNISOC 8200) சிப்செட் உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதுவும் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (ip64 dust and splash resistance) உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது.

அதுவும் 13எம்பி ரியர் கேமரா உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியர் கேமரா மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

செம ஆஃபரில் LAVA  5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5மிமீ ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லாவா போல்டு என்2 5ஜி போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Lava Bold N2 5G with 4GB RAM available at 22 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X