Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.12,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 13MP கேமரா.. HD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?

லாவா ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், அடிமட்ட விலைக்கு 5ஜி ஸ்மார்ட்போன்களை விரும்பும் பிரியர்களும் போட்டிப்போட்டு ஆர்டர் செய்யும்படியான தள்ளுபடி விலைக்கு 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 13 எம்பி கேமரா மற்றும் எச்டிபிளஸ் டிஸ்பிளே கொண்ட லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

லாவா மொபைல் நிறுவனத்தின் போல்டு சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுத்து. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலானது 19 சதவீத தள்ளுபடியுடன் ரூ.12,999 விலைக்கு அமேசான் தளத்தில் கிடைக்கிறது. ரூ.1,000 தள்ளுபடியும் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 விலைக்கு வாங்கலாம்.

விஸ்வரூப விற்பனை.. ரூ.12,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்!

பில்லினியர் ப்ளூ (Billionaire Blue), ரீகல் கோல்டு (Regal Gold) கலர்களில் இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிரீமியம் லுக் கொடுக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மட்டுமே கிடைக்கிறது. கூடுதலாக பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கிடைக்கிறது. டிஸ்பிளே, கேமரா, சிப்செட் பீச்சர்களை பார்க்கலாம்.

லாவா போல்டு என்2 5ஜி அம்சங்கள் (Lava Bold N2 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8200 ஆக்டா கோர் Octa Core (UNISOC T8200 ) சிப்செட்டை லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) டிசைன் கிடைக்கிறது. 2.5டி கிளாஸ் (2.5D Glass) பேக் செய்யப்பட்டு உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 260 பிபிஐ பிக்சன் டென்சிட்டி கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

8.75 எம்எம் தடிமன் பாடியில் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 18W சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 210 கிராம் எடை கொண்ட மாடலாக இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால், ஆடியோவுக்கு 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) பேக் செய்யப்பட்டு இருக்கிறது.

1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சிலாட் கொடுக்கும் மாடலாக இந்த லாவா போல்டு என்2 5ஜி கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மட்டுமே கிடைத்தாலும், கூடுதல் அவுட்புட் கொடுக்க 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செல்பீ & வீடியோ கால்களுக்காக 5 எம்பி ப்ரன்ட் கேமராவை இந்த லாவா போல்டு என்2 5ஜி கொண்டுள்ளது.

எச்டி ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். மேலும், போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் டைம் லேப்ஸ் (Timelapse) பீச்சர்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் ரீபோகஸ் (Refocus), ஆடியோ நோட் (Audio Note), மோஷன் போட்டோ (Motion Photo) மற்றும் பியூட்டி (Beauty) கிடைக்கிறது. எச்டிஆர் (HDR) உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Bold N2 5G With 4GB RAM Available At 19 Percent Discount on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X