பொளந்து கட்டுது விற்பனை.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி 5G போன்.. 18W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே!
இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் பிரியர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ரூ.12,000 பட்ஜெட்டுக்குள் 6000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 120Hz டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த லாவா ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.11,999 விலைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,000 விலை கம்மியாக இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். ரீகல் கோல்டு (Regal Gold) மற்றும் பில்லியனர் ப்ளூ (Billionaire Blue) கலர்களில் கிடைக்கிறது.

லாவா போல்டு என்2 5ஜி அம்சங்கள் (Lava Bold N2 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Octa Core Unisoc T8200 6nm) சிப்செட்டை இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்கிறது
6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 2.5டி கிளாஸ் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது.
13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. ரியர் கேமராவுக்கு ஃபிளாஷ் கிடைக்கிறது. செல்பீ கேமராவுக்கும் ஸ்கிரீன் ஃபிளாஷ் கொடுக்கப்பட்டு உள்ளது. எச்டி ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். போர்ட்ராய்டு (Portrait), ரீபோகஸ் (Refocus), எச்டிஆர் (HDR) பீச்சர்கள் உள்ளன.
மேலும், ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம்லேப்ஸ் (Timelapse), மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி (Beauty), நைட் (Night) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை பேக் செய்துள்ளளது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது.
இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்ய 185 நிமிடங்கள் தேவைப்படும். ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால், 750 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை மோடில் பேக்கப் கொடுக்கும். 810 நிமிடங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும். 8.75 மீமீ தடிமன் மற்றும் 210 கிராம் எடையை இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்க முடியாது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கொடுக்க IP64 ரேட்டிங் உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) மற்றும் குளோனாஸ் (GLONASS) கனெக்டிவிட்டிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications