Lava களமிறக்கும் புதிய 5ஜி போன்.. கம்மி விலை.. 5000mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லாவா நிறுவனம் கம்மி விலையில் புதிய 5ஜி போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது வரும் ஜூன் 3-ம் தேதி இந்தியாவில் லாவா போல்டு என்2 5ஜி (Lava Bold N2 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய லாவா போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

லாவா போல்டு என்2 5ஜி அம்சங்கள் (Lava Bold N2 5G specification): தரமான ஆக்டா கோர் 6என்எம் யுனிசோக் டி765 (Octa Core 6nm UNISOC T765) சிப்செட் உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதுவும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதுவும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.
அதேபோல் 13எம்பி ரியர் கேமரா உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ரியர் கேமரா மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

லாவா போல்டு என்2 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லாவா போல்டு என்2 5ஜி போனில் உள்ளன. இந்த புதிய லாவா போல்டு என்2 5ஜி போன் இந்தியாவில் ரூ.12,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications