Home
Mobile

அமேசான் அதிருது.. வெறும் ரூ.6,799 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிகரான டிசைன் மற்றும் பட்ஜெட்டில் இந்தியாவின் லாவா நிறுவனம் புதுப்புது மாடல்களை களமிறக்கி வருகிறது. இப்படி பிரீமியமான டிசைனில் டிரிபிள் ரியர் கேமரா, 5000mAh பேட்டரி, IP54 ரேட்டிங் போன்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களுடன் லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) களமிறங்கியது. இந்த லாவா போனின் விற்பனை அமேசான் பட்டையை கிளப்பி வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

லாவா போல்டு என்1 ப்ரோ அம்சங்கள் (Lava Bold N1 Pro Specifications): இந்த லாவா போனில் 6.67 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

அமேசான் அதிருது.. வெறும் ரூ.6,799 போதும்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வரவேற்க வேண்டியது. 50 எம்பி மெயின் + 8 எம்பி செகண்டரி கேமரா கொண்ட ஏஐ டிரிபிள் ரியர் கேமரா (AI Triple Rear Camera) கிடைக்கிறது. ஸ்கிரீன் ஃபிளாஷ் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. எச்டி வீடியோ ஷூட், ப்ரோ மோட், ப்யூட்டி போன்ற பீச்சர்கள் உள்ளன.

இந்த லாவா போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த மெமரி மட்டுமல்லாமல், 256 ஜிபிக்கான மெமரி சப்போர்ட் கொடுக்கும்படி மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. 376 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்-பை டைம் கொடுக்கும்படியான 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரிக்கு 10W சார்ஜிங் மற்றும் சார்ஜர் வருகிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் உள்ளது. இந்த பேட்டரியுடன் 8.35 எம்எம் தடிமன் வருகிறது. 200 கிராம் எடை கொடுக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கிடைக்கிறது. இருப்பினும், பேஸ் அன்லாக் (Face Unlock) பேக் செய்துள்ளது.

அமேசான் அதிருது.. வெறும் ரூ.6,799 போதும்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இதுபோக ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. அதேபோல அடிமட்ட பட்ஜெட் மாடலாக இருப்பதால், யுனிசோக் டி606 ஆக்டா கோர் (UNISOC T606 Octa Core) சிப்செட் மட்டுமே கிடைக்கிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கும் நேரத்தில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்துள்ளது. ஆனால், பட்ஜெட்டுக்கு ஓகேதான்.

இந்த லாவா போல்டு என்1 ப்ரோ போனில் IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொடுக்கிறது. டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருக்கிறது. டைட்டானியம் கோல்டு (Titanium Gold) மற்றும் ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். விலையை பார்ப்போம்.

லாவா போல்டு என்1 ப்ரோ அமேசான் விற்பனை (Lava Bold N1 Pro Amazon Sale): இந்த லாவா போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,799ஆக இருக்கிறது. ரூ.6,450 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் 4ஜி ஸ்மார்ட்போன் வேண்டுமானால், இதை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Lava Bold N1 Pro With 50MP Camera Available For Purchase in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X