ஆளுக்கு 1 இல்ல.. 2 ஆர்டர் விழுது.. ரூ.5000 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் (Lava Mobile) நிறுவனத்தின் லாவா போல்டு என்1 லைட் (Lava Bold N1 Lite) ஸ்மார்ட்போனானது, சத்தமே இல்லாமல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டது. அடிமட்ட பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி, 13 எம்பி கேமரா, IP54 ரேட்டிங் மட்டுமல்லாமல், 10W ஃபாஸ்ட் சார்ஜிங், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த லாவா போல்டு என்1 லைட் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஏற்கனவே லாவா போல்டு என்1 (Lava Bold N1) மற்றும் லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மாடல்கள் அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இப்போது, கூடுதலாகவும், புதிதாகவும் லாவா போல்டு என்1 லைட் (Lava Bold N1 Lite) ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

ஆனால், இது அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பாகவே, சத்தமில்லாமல், அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டது. அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பது மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆளுக்கு 2 வாங்கும்படி அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. போல்டு சீரிஸ் போலவே டிசைன் இருக்கிறது. ஆனால், ஸ்லிம் மற்றும் காம்பாக்ட் பாடி கொடுக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி இருக்கிறது.
லாவா போல்டு என்1 லைட் அம்சங்கள் (Lava Bold N1 Lite Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இதுவொரு பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display) மாடலாக இருக்கிறது.
ஆக்டா கோர் யுனிசோக் (Octa Core UNISOC) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 கோ (Android 15 Go) ஓஎஸ் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு என்1 லைட் ஸ்மார்ட்போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. அதேபோல 13 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கேமரா மோட்கள் வருகின்றன.
ஆகவே, ஆட்டோ (Auto), போர்ட்ராய்டு (Portrait) மற்றும் நைட் மோட் (Night Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த கேமராவில் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு என்1 லைட் ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் (5 ஜிபி விர்ச்சுவல் ரேம்) கிடைக்கிறது. 64 ஜிபி மெமரி கிடைக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது.
அதோடு 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சைடு ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Side Fingerprint Unlock), பேஸ் ரிககனைசேஷன் (Face Recognition) கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.5,698ஆக இருக்கிறது. இந்த விலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.560.80 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, ரூ.5,128.20 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.5,400 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு என்1 லைட் ஸ்மார்ட்போனில் கிரிஸ்டல் கோல்டு (CRYSTAL GOLD) மற்றும் கிரிஸ்டல் ப்ளூ (CRYSTAL BLUE) ஆகிய கலர்களில் கிடைக்கின்றன. இந்த அடிமட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்களை கொடுக்கிறது. டிசைனும் பிரீமியமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








