ஆர்டர் பொளக்கும்.. ரூ.5,999 ஒன்னு.. ரூ.6,799 ஒன்னு.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. லாவா போல்டு சீரிஸ்!
பிரீமியம் லுக் கொடுக்கும் பட்ஜெட் விலை மாடல்களாக லாவா போல்டு என்1 (Lava Bold N1) மற்றும் லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) போன்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, விர்ச்சுவல் ரேம் போன்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த லாவா போல்டு சீரிஸ் மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா போல்டு என்1 அம்சங்கள் (Lava Bold N1 Specifications): இந்த லாவா போனில் பெரிதாக பீச்சர்களை பார்க்க முடியவில்லை. பட்ஜெட்டுக்கு ஏற்ப மட்டுமே இருக்கின்றன. ஆகவே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கோ எடிஷன் (Android 14 Go Edition) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் (Octa Core UNISOC) சிப்செட் கிடைக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது.

6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. 64 ஜிபி மெமரி கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த லாவா போல்டு என்1 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) உள்ளது.
இந்த பட்ஜெட்டிலும் IP54 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ப்ரீ சர்வீஸ் ஹோம் மற்றும் 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த லாவா போல்டு என்1 போனை பிரீமியம் குளோசி பேக் பேனல் கொண்ட ரேடியண்ட் பிளாக் (Radiant Black) மற்றும் ஸ்பார்க்கிளிங் ஐவரி (Sparkling Ivory) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது, ப்ரோ மாடலை பார்ப்போம்.
லாவா போல்டு என்1 ப்ரோ அம்சங்கள் (Lava Bold N1 Pro Specifications): இந்த லாவா ப்ரோ மாடலில் கொஞ்சம் பீச்சர்கள் அதிகமாக எதிர்பார்க்கலாம். எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரேஷ் ரேட் மட்டுமல்லாமல், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கிறது. இந்த பீச்சர்களுடன் 6.67 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) பஞ்ச்-ஹோல் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 (UNISOC T606) சிப்செட் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு என்1 ப்ரோ போனிலும் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், கூடவே 256 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் + 10W சார்ஜர் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த லாவா போனுக்கும் IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட், ஹோம் சர்வீஸ் மற்றும் 1 வருட வாரண்டி உள்ளது. டைட்டானியம் கோல்டு (Titanium Gold), ஸ்டீல்த் பிளாக் (Stealth Black) கலர்களில் வருகிறது.
லாவா போல்டு என்1 போனின் விலை ரூ.5,999ஆக இருக்கிறது. இந்த விலையுடன் ஜூன் 4ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதேபோல லாவா போல்டு என்1 ப்ரோ போனின் விலை ரூ.6,799ஆக இருக்கிறது. ஆஃபர் விலையில் ரூ.6,699-க்கு கிடைக்க இருக்கிறது. ஜூன் 2ஆம் தேதி முதல் அமேசானில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








