Home
Mobile

அடிமட்ட ரேட்ல புது 5G போன்.. ரூ.6,749-க்கு 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 2 OS அப்கிரேட் மாடல்!

லாவா நிறுவனத்தின் லாவா போல்டு என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போன் அடிமட்ட பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட் கொடுப்பது மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 4K வீடியோ ரெக்கார்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. அமேசான் கிரேடி இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் கிடைக்க இருக்கிறது. இந்த புது லாவா ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு நிகராக அடிமட்ட பட்ஜெட்டில் இந்தியாவின் லாவா மொபைல்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் லாவா போல்டு சீரிஸ் மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு களமிறங்கி வருகிறது. இதில் 4ஜி மாடல்களே பெரும்பாலும் இருக்கும். இப்போது 5ஜி மாடலாக இந்த லாவா போல்டு என்1 5ஜி வந்துள்ளது.

அடிமட்ட ரேட்ல புது 5G போன்.. ரூ.6,749-க்கு 5000mAh பேட்டரி.. மாடல்?

அதேபோல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்தது மட்டுமல்லாமல், 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களையும், 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பதே வரவேற்க வேண்டியது. ஆனால், கூடுதலாக 2 ஜெனரேஷன் கிடைப்பது மேலும் வரவேற்க வேண்டியதாக இருக்கிறது. பீச்சர்களை பார்ப்போம்.

லாவா போல்டு என்1 5ஜி அம்சங்கள் (Lava Bold N1 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa core UNISOC T765 6nm) சிப்செட் கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்கிறது. 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போனில் 2 வேரியண்ட்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. இதற்கு விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது.

அடிமட்ட ரேட்ல புது 5G போன்.. ரூ.6,749-க்கு 5000mAh பேட்டரி.. மாடல்?

4K வீடியோ ரெக்கார்டிங்குடன் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உள்ளது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.7,499ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆகவும் இருக்கிறது. ரூ.750 உடனடி பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.6,749 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போனில் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) விற்பனையில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, செப்டம்பர் 23ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N1 5G With 13MP Camera Launched Under Rs 8000 in India Sale From September 23 in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X