Home
Mobile

மே தினம் ஸ்பெஷல்.. ரூ.11,999 பட்ஜெட்ல 5000எம்ஏஎச் பேட்டரி.. 5ஜி.. வருகிறது புதிய Lava மாடல்.. எந்த போன்?

லாவா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் லாவா போல்டு என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக கடந்த ஆண்டு 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் லாவா போல்டு என்1 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் ஒன்று சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்1 5ஜி மாடல் இன்று முதல் முறையாக அமேசான் தளத்தில் மதியம் 12 அளவில் விற்பனைக்கு வருகிறது. இந்த புதிய வேரியண்ட் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த மாடலை ரூ.11,999-விலையில் வாங்கிவிட முடியும்.

மே தினம் ஸ்பெஷல்.. வருகிறது புதிய Lava மாடல்.. எந்த போன்?

லாவா போல்டு என்1 5ஜி அம்சங்கள் (Lava Bold N1 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa core UNISOC T765 6nm) சிப்செட் உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 6.75 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதுவும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த புதிய லாவா போல்டு என்1 5ஜி மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த லாவா போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மே தினம் ஸ்பெஷல்.. வருகிறது புதிய Lava மாடல்.. எந்த போன்?

குறிப்பாக 13 எம்பி ரியர் கேமரா வசதியுடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இது 4K வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

லாவா போல்டு என்1 5ஜி போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5000mAh பேட்டரி உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Bold N1 5G New variant goes on sale today in Amazon: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X