Home
Mobile

செம்ம டிமாண்ட்.. மே.27-ல் மீண்டும் SALE-க்கு வரும் LAVA 5ஜி போன்.. 5000mAh பேட்டரி, 12GB ரேம், IP54!

லாவா (LAVA) நிறுவனம் சமீபத்தில் தான் (மே மாத தொடக்கத்தில்) அதன் லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது. இது கடந்த மே 1 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது

இதற்கிடையில் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது மே 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளத்தின் படி, இந்த மாடலின் எம்ஆர்பி விலை ரூ.14,999 ஆகும்.

செம்ம டிமாண்ட்.. மே.27-ல் மீண்டும் SALE-க்கு வரும் LAVA 5ஜி போன்!

ஆனால் ரூ.3000 நேரடி தள்ளுபடியின் கீழ் இது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும். கூடுதலாக ரூ.600 பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர்த்து பீம் யுபிஐ ஆப் வழியிலாக பேமண்ட் செய்தால் ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் பிளிப்கார்ட் அறிவித்துள்ளது.

லாவா போல்ட் என்1 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. இது 13-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்ட டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது

லாவா போல்ட் என் 1 5ஜி ஸ்மாட்போனின் விரிவான அம்சங்கள்:
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2.5டி கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டா-கோர் யூனிசாக் டி765 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 6ஜிபி வரை ரேம்
- 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் மூலம் 12ஜிபி வரை ரேம்-ஐ விரிவாக்க முடியும்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஆன்போர்டு ஸ்டோரேஜை 1டிபி வரை விரிவாக்க முடியும்
- 13-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்ட ஏஐ-பேக்டு கேமரா யூனிட்
- 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்
- ஃபேஸ் அன்லாக் அம்சம்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 5ஜி
- ப்ளூடூத்
- வைஃபை 802.11 b/g/n/ac
- ஓடிஜி
- 10W சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
- அளவீட்டில் 165.85x76.6x8.2மிமீ
- எடையில் 198 கிராம்.

ஒருவேளை நீங்கள் லாவா போல்ட் என்1 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 6ஜிபி ரேம் ஆப்ஷனை உடனே வாங்க நினைத்தால், அதாவது மே 26 வரை காத்து கிடந்தது பிளிப்கார்ட் விற்பனையில் 4ஜிபி ரேம் ஆப்ஷனை வாங்காமல், அதற்கு முன்பாகவே 6ஜிபி ரேம் ஆப்ஷனை வாங்க நினைத்தால், இது அமேசான் இந்தியாவில் இப்போது வாங்க கிடைக்கிறது

ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு, மே மாத தொடக்கத்தில் இருந்து வாங்க கிடைக்கும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட லாவா போல்ட் என்1 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்ன்ஸ் ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.12,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் ஷாம்பெயின் கோல்ட் மற்றும் ராயல் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது

Best Mobiles in India

English summary
Lava Bold N1 5G 4GB RAM 64GB Storage Option Coming To sale Via Flipkart on May 26 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X