ஓரமா ஒத்துங்க மொத்தமா.. ரூ.12,499 பட்ஜெட்ல 3D கர்வ்ட் டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 64MP கேமரா.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதுவரை கிடைக்காத விலைக்கு 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 64 எம்பி கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா போல்டு 5ஜி அமேசான் விலை (Lava Bold 5G Amazon Price): இந்த லாவா ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,998ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த உடனடி டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். ஆகவே, 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.12,998 பட்ஜெட்டிலும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.12,499 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ரூ.12,700 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கிறது.
லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): இந்த லாவாவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்து இருக்கிறது. 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவில் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.

64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் உள்ளது. இந்த மெயின் கேமராவில் பிரீமியம் அவுட்புட் கொடுக்க சோனி சென்சார் கிடைக்கிறது. அதேபோல 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்படுகிறது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், டூயல் வியூ வீடியோ (Dual View Video), அல்ட்ரா எச்டி (UHD) பீச்சர்கள் உள்ளன.
இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 110 நிமிடங்களில் இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஸ்டான்ட்பை மோடில் 480 மணி நேரங்களுக்கு பேக்கப் மற்றும் 610 நிமிடங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. அதேபோல ஏஜிசி கிளாஸ் புரொடெக்சன் (AGC Glass Protection) கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் சிப்செட் கிடைப்பதால், 5ஜி எஸ்ஏ (5G SA), என்எஸ்ஏ (NSA) கிடைக்கிறது. மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது.
இதுபோக வை-பை (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனில் சப்பயர் ப்ளூ (Sapphire Blue) என்னும் ஒரேவொரு கலர் விற்பனைக்கு கிடைக்கிறது. இது அல்ட்ரா பிரீமியம் ஸ்மார்ட்போன் லுக் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications