கனவுல கிடைக்காது.. ரூ.10,499 போதும்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படியான டிசைன் மற்றும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், கனவிலும் நினைக்காதபடி அடிமட்ட பட்ஜெட்டில் லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) கிடைக்க இருக்கிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த லாவா போல்டு 5ஜி போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): இந்த லாவா போனில் 6.67 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏஜிசி கிளாஸ் புரொடெக்சன் (AGC Glass Protection) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பஞ்ச்-ஹோல் (Punch-hole) டிசைன் வருகிறது.

இந்த பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே கிடைப்பதே வரவேற்க வேண்டியதுதான். ஆனால், இதில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மேலும், 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை லாவா கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
இந்த லாவா போல்டு 5ஜி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 6300 SoC) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, மிட்-ரேஞ்ச் போன்களில் எதிர்பார்க்கும் பர்ஃபாமென்ஸ் இந்த போனிலும் கிடைக்கும். 64 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
பேட்டரியில் எந்த குறையிலும் இல்லை. ஏனென்றால், டிஸ்பிளேவுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு 5ஜி போனில் பட்ஜெட்டைவிட கூடுதலாக IP64 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது.
3டி கர்வ்ட் டிஸ்பிளே வருவதால், இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) பேக் செய்துள்ளது. இந்த லாவா போல்டு 5ஜி போனில் மூன்று வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஆகவே, 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது.
அதேபோல 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த லாவா போல்டு 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.10,499 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, 3டி கர்வ்ட் டிஸ்பிளேவில் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் மாடலாக இந்த போன் இருக்கப் போகிறது.
மேற்கண்ட பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களுடன் அமேசான் (Amazon) தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி விற்பனை தொடங்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொடுக்கும்படி சீன நிறுவனங்களிடம் கூட மாடல்கள் இல்லை. ஆகவே, இது மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








