LAVA-க்கு கும்பிடு.. ரூ.11999 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன மார்கெட்டையும் தூக்கி சாப்பிடும்படியான பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) போன் கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 600 சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்கிரேட், IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற கிடைக்காத பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த செக்மெண்ட்டில் ஒரேவொரு கர்வ்ட் டிஸ்பிளே மாடலாக கிடைக்கும் இந்த போனின் விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. முன்பு, மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடல்களில் கிடைத்த இந்த டிஸ்பிளே டிசைன், இப்போது ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகும் மாடல்களிலும் கிடைக்கிறது. ஆனால், அதுவும் சீன பிராண்ட்களாகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவின் லாவா நிறுவனம், அந்த நிறுவனங்களையே தூக்கி சாப்பிட்டிருக்கிறது.

இந்த லாவா போல்டு 5ஜி போனில் 3டி கர்வ்ட் டிசைன் மட்டுமல்லாமல், அமோலெட் (AMOLED) பேனல் கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனிலேயே இந்த பட்ஜெட்டுக்கு அமோலெட் டிஸ்பிளே கிடைப்பது வரவேற்க வேண்டியதாகும். ஆனால், இதில் கர்வ்ட் டிசைனே கிடைப்பதால், இந்த செக்மெண்ட்டில் ஒரேவொரு மாடலாக இருக்கிறது. இதை லாவா நிறுவனமே தெரிவித்து இருக்கிறது.
லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): இந்த அமோலெட் டிஸ்பிளேவானது, 6.67 இன்ச் சைஸ் கொண்டிருக்கிறது. 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கலர் அக்கியூரசிக்காக 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம், 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட மூன்று வேரியண்ட்கள் கிடைக்கின்றன.
இந்த வேரியண்ட்களுக்கு 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு யுனிசோக் சிப்செட் மட்டுமே கிடைக்கும் என்று பார்த்தால், இதில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இதுபோக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்கிரேட் கொண்ட ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

ஆகவே, டிஸ்பிளே மட்டுமல்லாமல், பர்ஃபாமென்ஸ் பக்கமும் தட்டிதூக்கி இருக்கிறது. சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் அதற்கு 2 எம்பி செகண்டரி கேமரா சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா போல்டு 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு டூயல் வியூ வீடியோ (Dual View Video), அல்ட்ராஎச்டி (UHD), எச்டிஆர் (HDR) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
480 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை பேக்கப் கொடுக்கும்படியான 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ற்றும் டைப்-சி கேபிள் சப்போர்ட் கிடைக்கிறது. ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. சப்பயர் ப்ளூ (Sapphire Blue) கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த லாவா போல்டு 5ஜி போனின் மூன்று வேரியண்ட்கள் வெளியாகி இருந்தாலும், 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வேரியண்ட்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதில் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல் வேண்டுமானால், அதைவிட மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த போல்டு மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








