அள்ளி தரும் அமேசான்.. 64எம்பி சோனி கேமரா.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 64எம்பி சோனி கேமரா, ஐபி64 ரேட்டிங், அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த லாவா போல்டு 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12499 விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த லாவா போல்டு 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது.
64 எம்பி சோனி மெயின் கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. இதுதவிர 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








