Home
Mobile

பொளந்து கட்டும் விற்பனை.. 64MP கேமரா.. 3டி டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இப்போது Black Friday Sale நடக்கிறது. அதோடு லிமிடெட் லைட் டீலில் (Limited Time Deal) லாவா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் கர்வ்ட் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்ட லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அமேசான் லிமிடெட் டைம் டீலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட வங்கிகளிகள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ விருப்பத்தில் வாங்கினால் ரூ.750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. மேலும், ரூ.13,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற முடியும்.

பொளந்து கட்டும் விற்பனை.. 64MP கேமரா.. 3டி டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 Chipset) கொண்டுள்ள இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனில் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1080 x 2400 ரெசொலூஷடன் 6.67 இன்ச் அமோலெட் வருகிறது.

394 பிபிஐ பிக்சல் டென்சிட்டியும், 16.7 மில்லியன் கலர் டெப்த்தையும் கொண்டுள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை கொண்டிருப்பதால், அதற்கு ஏஜிசி கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவுக்கு இந்த கம்மியான விலையிலும் பாதுகாப்பு கிடைக்கும். 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

3டி கர்வ்ட் டிஸ்பிளே மாடல்களை பொறுத்தவரை பேட்டரி கம்மியாகவே இருக்கும். ஆனால், இந்த லாலா போனில் நாள் முழுக்க ஹெவியாக பயன்படுத்தினாலும் பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி கிடைக்கிறது. ரியர் கேமராவில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா கிடைக்கிறது. 2 மெகாபிக்சல் செகண்டரி கேமராவை இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

பொளந்து கட்டும் விற்பனை.. 64MP கேமரா.. 3டி டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

முன்பக்கம் பார்க்கையில் வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளை எடுத்து கொள்ளும்படி 16 மெகா பிக்சல் கேமரா கிடைக்கிறது. பிரைமரி கேமராவுக்கு சோனி நிறுவனத்தின் சென்சார் கிடைப்பதால், இந்த விலையைவிட கூடுதல் அவுட்புட் கேமராவில் கிடைக்கும். IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த லாவா ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கம்மியான விலைக்கு சைடில் ஃபிங்கர்பிரிண்ட் மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். ஆனால், இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனானது இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது. ஆடியோவுக்காக டைப்-சி போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சப்பயர் ப்ளூ (Sapphire Blue) கலரில் இந்த லாவா போனை வாங்கி கொள்ளலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொடுக்கும் மாடல் மட்டுமல்லாமல், கூடுதலாக 2 மாடல்கள் இந்த போல்டு 5ஜி ஸ்மார்ட்போனில் இருக்கின்றன. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மலிவான விலைக்கு கிடைக்கும் மாடலாக இருக்கிறது. அடுத்தது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொடுக்கும் மாடல் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ உள்ளது.

வை-பை 802, ப்ளூடூத் 5.1 ஆகிய கனெக்டிவிட்டிகள் இந்த லாவா போனுக்கு கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட்டும் கொடுக்கப்படுகிறது. அமேசான் பிளாக் பிரைடே சேலிலும் பல்வேறு மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் மாடலுக்கு இந்த போன் பக்காவாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold 5G Available at Discounted Price in Amazon Sale Check Limited Time Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X