LAVA செம்ம போடு.. ரூ.13999 க்கு 3D AMOLED டிஸ்பிளே.. 64MP SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங் மாடல்!
இந்திய மார்கெட்டில் லாவா ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே கொண்ட மாடல்கள் மலிவான விலைக்கு கிடைப்பதால் விற்பனையிலும் வரவேற்பு பெறுகிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிக்கார்ட் தளத்தில் 26 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் ரூ.13,250 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இதே வேரியண்ட் பிளிப்கார்ட்டில் ரூ.18,999 க்கு கிடைக்கிறது.

லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைத்துள்ளது.
மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் வழியாக கொடுக்கப்படுகிறது. 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D curved AMOLED) டிஸ்பிளேவை இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைத்துள்ளது.
16.7 மில்லியன் கலர் டெப்த்தை கொடுத்துள்ளது. 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி சென்சார் (Sony Sensor) சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் சப்போர்ட் கொடுக்கிறது.
டூயல் வியூ வீடியோ (Dual View Video), பிலிம் மோட் (Film Mode), ப்ரோ வீடியோ (Pro Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse) போன்ற பீச்சர்கள் இந்த கேமராவில் கிடைக்கிறது. மேலும், அல்ட்ரா எச்டி மோட் (UHD Mode), ஜிஐஎப் மோட் (GIF), பியூட்டி மோட் (Beauty Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளது.
ஏஐ மோட் (AI Mode), ப்ரோ மோட் (Pro Mode), பனோரமா மோட் (Panorama Mode) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் டாப்-மாடலாக இருக்கிறது. மேலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கூடுதலாக இந்த லாவா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க IP64 ரேட்டிங் கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








