அடேங்கப்பா.. குறைவான விலை.. இந்தியாவே எதிர்பார்த்த 5ஜி போன் களமிறங்கியது.. சோனி கேமரா.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் இந்தியாவில் லாவா போல்டு 5ஜி (Lava Bold 2 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லாவா போல்டு 5ஜி அம்சங்கள் (Lava Bold 2 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி ஏஐ சோனி ரியர் கேமரா உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7060 எஸ்ஒசி (MediaTek Dimensity 7060 SoC) சிப்செட் உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதி இந்த லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி உடன் லாவா போல்டு 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. குறிப்பாக வரும் மார்ச் 19-ம் தேதி அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். ஃபெதர் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த புதிய லாவா 5ஜி போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








