ஆர்டர் பிச்சிக்குது.. வெறும் ரூ.12,249 போதும்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் லுக் கொடுக்கும் பட்ஜெட் விலை மாடலாக லாவா போல்டு 2 5ஜி (Lava Bold 2 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் கிடைக்கிறது.
7.55 எம்எம் தடிமனில் ஸ்லிம் மற்றும் ஸ்லீக் டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டது. அரிசோன்டல் டிசைனில் கேமரா சிஸ்டம் பிரீமியம் லுக் கொடுத்து உள்ளது. இந்த பட்ஜெட்டில் சோனி சென்சாருடன் மெயின் கேமராவை கொடுத்து உள்ளது. அமோலெட் டிஸ்பிளேவும் வரவேற்க வேண்டியதாக இருக்கிறது. இப்போது, ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

அதாவது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999 ஆக இருக்கிறது. இதில் ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டையும் பெற்றால், ரூ.12,249 விலைக்கு இந்த லாவா போல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
மேலும், ரூ.13,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். பெதல் ஒயிட் (Feather White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. 6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொடுக்கப்பட்டு உள்ளது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.
லாவா போல்டு 2 5ஜி அம்சங்கள் (Lava Bold 2 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்கிரேட் மற்றும் 2 வருடங்களுக்கு சாப்ட்வேர் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது. 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுத்து உள்ளது. மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 800 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + கியூவிஜிஏ (QVGA) கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து உள்ளது. நைட் மோட், டூயல் வியூ வீடியோ உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது.
35 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜிங் செய்து கொள்ளும்படி 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ மற்றும் என்எஸ்ஏ கிடைக்கிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ கிடைத்து உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








