LAVA விஸ்வரூபம்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட் மிரளும் பட்ஜெட்டில், சீன நிறுவனங்களை தூக்கிசாப்பிடும் பிரீமியம் டிசைனில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 64 எம்பி மெயின் கேமரா, 16 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 128 ஜிபி மெமரி போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) போன் வெளியாக இருக்கிறது. இப்போது, அதிகராப்பூர்வமாக வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த லாலாவின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பட்ஜெட்டில் பக்கா டிசைன் மற்றும் பீச்சர்களை கொடுப்பதில் சீன நிறுவனங்களை அடித்து கொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனால், இப்போது அந்த நிறுவனங்களை தூக்கிசாப்பிடும்படி கம்மியான பட்ஜெட்டில் பக்காவான பீச்சர்கள் மற்றும் டிசைனில் புதுப்புது மாடல்களை இந்திய நிறுவனமான லாவா களமிறக்கி வருகிறது.

இந்த வரிசையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் பட்ஜெட்டில் மிரட்டலான கேமரா பீச்சர்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும்படி லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) மாடல் வெளியாக இருக்கிறது. இந்த மாடலின் டிசைனே அதன் மீதான எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி வெளியாகிறது.
அமேசான் தளத்தில் வெளியாவதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் டிசைன், ரேம், கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்களும் வெளியாக இருக்கின்றன. இந்த பீச்சர்களை முதலில் பார்ப்போம். அதன்பிறகு மார்கெட்டில் கசிந்த முழு பீச்சர்கள் மற்றும் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
லாவா பிளேஸ் எக்ஸ் அம்சங்கள் (Lava Blaze X Specifications): இந்த லாவா மாடலில் 6.7 இன்ச் 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) வருகிறது. 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மேலும், 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் உள்ளது.

64 எம்பி மெயின் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. பிரீமியம் மேட் பினிஷிங் கொண்ட வயலெட் (Violet) மற்றும் ஒயிட் (White) ஆகிய 2 கலர்களின் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே, லாவா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இருப்பினும், மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த டிஸ்பிளேவில் அமோலெட் (AMOLED) பேனல் வருகிறது. அதேபோல 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருகிறது. 64 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் வருகிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் அல்லது 2 எம்பி மேக்ரோ கேமரா வர வாய்ப்புள்ளது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் மாடலில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14) வருகிறது. 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஆரம்ப விலை ரூ.17,000 பட்ஜெட்டில் இருக்கலாம். ஆகவே, நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








