Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெறும் ரூ.13,000 பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அல்ட்ரா பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 128 ஜிபி மெமரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, சோனி சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்களுடன் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) போன் வெளியாகி இருக்கிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி மாடலின் பீச்சர்கள், விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா பிளேஸ் எக்ஸ் அம்சங்கள் (Lava Blaze X Specifications): இந்த லாவா போனில் 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் உள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல SONY கேமரா போன்!

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) அப்கிரேட் உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனில் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.

சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட டூயல் ரியல் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் டூயல் வியூ வீடியோ, ஃபிலிம், ப்ரோ வீடியோ, பியூட்டி, எச்டிஆர், நைட் மற்றும் போர்ட்ராய்டு போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த லாவாவில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.13,000 பட்ஜெட்ல SONY கேமரா போன்!

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் போனில் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் சப்போர்ட் உள்ளது. பேட்டரி உடன் 183 கிராம் எடை கொண்டிருக்கிறது.

அதேபோல 8.45 மிமீ தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அல்ட்ரா பிரீமியம் டிசைனில் ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் வருகிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.16,999 ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் அறிமுக சலுகையாக ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த லாவா மாடலை ரூ.13,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். அமேசான் (Amazon) தளத்தில் ஜூலை 20ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Blaze X With 64MP Camera, 16GB RAM Sale From July 20 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X