தீபாவளிக்கு இத விடவே கூடாது.. ரூ.14,549-க்கு 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 12GB ரேம்.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளேவை கொடுப்பது மட்டுமல்லாமல், சோனி சென்சார் கொண்ட 64 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் ரூ.15,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,299 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு போக கூடுதலாக ரூ.750 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,549 விலைக்கு வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Lava Blaze X 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
இதுபோக 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் பிரீமியம் டிசைன் மற்றும் பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கிறது.
ஆனால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மட்டுமல்லாமல், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சோனி சென்சார் (Sony Sensor) கொண்ட 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவுக்கு 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. லாவா ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும் ப்ரோ வீடியோ, போர்ட்ராய்டு மோட், டூயல் வியூ வீடியோ, நைட் மோட் போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. டைப்-சி சார்ஜிங் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
610 நிமிடங்களுக்கு யூடியூப் வீடியோ பிளேபேக் மற்றும் 480 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்-பை டைம் கொடுக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
8.45 எம்எம் தடிமன் மற்றும் 183 கிராம் எடை கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ கிடைக்கிறது. இந்த லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் டைட்டானியம் கிரே (Titanium Grey) மற்றும் ஸ்டார்லைட் பர்பிள் (Starlight Purple) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








