Home
Mobile

ப்பா.. என்ன இப்படி இருக்கு.. சைனீஸ் போன்களுக்கு செக் வைக்கும் டிசைன், விலை, அம்சங்கள்.. Lava Blaze X 5G ரெடி!

கடந்த சில தினங்களாக எக்ஸ் வடிவத்தை வெளிப்படுத்தும் போஸ்டர்கள் வழியாக மட்டுமே டீஸ் செய்யப்பட்டு வந்த லாவா நிறுவனத்தின் பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போன் ஆனது.. ஒருவழியாக அதன் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்தி உள்ளது. முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட எக்ஸ் தளம் வழியாக லாவா பகிர்ந்துள்ள ஒரு சமீபத்திய டீஸர் வீடியோ வழியாக.. லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை 360டிகிரி கோணங்களிலும் பார்க்க முடிகிறது. டக்குனு பார்க்கும் எவருமே இதை ஒரு லாவா ஸ்மார்ட்போன் என்று கண்டுபிடிக்க மாட்டார்கள்.

அந்த அளவிற்கு அட்டகாசமான பிரீமியம் டிசைனை பெற்றுள்ள லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? அடுத்தடுத்த வாரங்களில் இந்திய சந்தையில் வேறு என்னென்ன 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? இதோ விவரங்கள்:

சைனீஸ் போன்களுக்கு செக் வைக்கும் விலை, அம்சங்களுடன் Lava Blaze X 5G!

எப்போது அறிமுகமாகும்? லாவாவின் லேட்டஸ்ட் வீடியோ டீஸர் உடன் சேர்த்து லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது வருகிற ஜூலை 10 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதும், ஜூலை 20 மற்றும் ஜூலை 21 ஆம் தேதிகளில் நடைபெறும் அமேசான் பிரைம் டே விற்பனையின் போது இது பிரத்தியேகமாக வாங்குவதற்குக் கிடைக்கும்.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஜூலை 10 வெளியீட்டு தேதியோடு சேர்த்து லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 2 முக்கிய அம்சங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் வட்ட வடிவிலான கேமரா யூனிட் இடம்பெறும். அதில் டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் பேக் செய்யப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட்டில் 64எம்பி என்கிற டெக்ஸ்ட்டை தெளிவாக பார்க்க முடிகிறது. ஆக இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் உள்ள பிரைமரி கேமராவானது 64எம்பி சென்சார் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இந்த டீஸர் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 16ஜிபி வரையிலான ரேம் இடம்பெறும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. அதில் 8ஜிபி ஃபிசிக்கல் ரேம் ஆகவும், 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆகவும் இருக்கலாம்.

இதுதவிர்த்து லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் டீஸர் வீடியோ வழியாக இது செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் உடன் வருவதையும், இது கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.

பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் ஆனது லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் இருப்பது போல் தெரிகிறது. அதேசமயம் ஸ்பீக்கர் கிரில், சிம் ட்ரே மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் ஸ்மார்ட்போனின் கீழே இருக்கின்றன. டீஸர் வீடியோவில் இது மெட்டல் ஃபிரேம் டிசைனை கொண்டிருப்பது போல் தெரிகிறது மற்றும் க்ரே மற்றும் பிளாக்/ப்ளூ கலர்களில் காணப்படுகிறது.

லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி என்கிற பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வரும். மேலும் இது லாவா பிளேஸ் சீரீஸின் கீழ் அறிமுகமான லாவா பிளேஸ் (Lava Blaze), லாவா பிளேஸ் 2 (Lava Blaze 2), லாவா பிளேஸ் ப்ரோ (Lava Blaze Pro), லாவா பிளேஸ் கர்வ் (Lava Blaze Curve) ஆகிய மாடல்களுடன் இணையும்

என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.15,990 க்கு தொடங்கலாம். முன்னதாக இது ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் டீஸர் வீடியோ வழியாக இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களை பார்த்த பின்னர், இது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வரும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டோம்.

Best Mobiles in India

English summary
Lava Blaze X 5G with 64MP Camera 16GB RAM To Launch in India on July 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X