சீன நிறுவனங்களை ஓரங்கட்டும் இந்திய நிறுவனம்! ரூ.10,500க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? .. இதோ ரிவ்யூவ்!

|

சீன நிறுவனங்களுடன் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் இந்திய ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்று லாவா. இந்திய வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் லாவா நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி லாவா நிறுவனம் தற்போது ரூ.12,000 விலைப் பிரிவில் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.

குறிப்பிடத்தக்க அம்சம்

குறிப்பிடத்தக்க அம்சம்

 • ஸ்டைலான வடிவமைப்பு
 • 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
 • தரமான முதன்மை கேமரா
 • நீடித்த பேட்டரி ஆயுள்
 • சிறந்த சாஃப்ட்வேர்
 • இன்னும் மேம்பட்டிருக்கலாம்

  இன்னும் மேம்பட்டிருக்கலாம்

  மந்தமான செயல்திறன்

  மெதுவான சார்ஜிங் வேகம்

  பட்ஜெட் விலை

  பட்ஜெட் விலை

  Blaze என்பது லாவாவின் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் தொடர் ஆகும். ரூ.12,000 விலைப்பிரிவில் அறிமுகமான லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது ரூ.10,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பெரிய அளவிலான 5000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

  அதாவது மிட் ரேன்ஜ் விலைப்பிரிவில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. ஆனால் இது பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

  லாவா ப்ளேஸ் ப்ரோ வடிவமைப்பு

  லாவா ப்ளேஸ் ப்ரோ வடிவமைப்பு

  இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சிறந்த வகையில் இருக்கிறது. இதன் பின்புறம் பளபளப்பான வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இந்த விலைப்பிரிவில் கண்டிறாத கேமரா தொகுப்புகள் இதில் இடம்பெற்றிருக்கிறது. மிகவும் அருமையாக ரிச்சான லுக்கில் இது இருக்கிறது. ஆரஞ்ச், ப்ளூ மற்றும் கோல்ட் வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. க்ரீன் வண்ண விருப்பம் சற்று மேம்பட்டது போல் தெரிகிறது.

  லாவா ப்ளேஸ் ப்ரோ டிஸ்ப்ளே

  லாவா ப்ளேஸ் ப்ரோ டிஸ்ப்ளே

  Blaze Pro ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD IPS LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஒருசில குறைபாடுகள் இருந்தாலும் நல்ல தோற்றமுடைய டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. அது என்ன குறைபாடு என தோன்றலாம், அதாவது சூரிய ஒளியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது இதன் தெளிவுநிலை அவ்வளவு துல்லியமாக இல்லை. ஆனால் சிறந்த தன்மையுடன் ஓடிடி தளங்களை இதில் ஸ்ட்ரீம் செய்து பார்க்க முடியும்.

  லாவா ப்ளேஸ் ப்ரோ கேமரா

  லாவா ப்ளேஸ் ப்ரோ கேமரா

  லாவா பிளேஸ் ப்ரோ கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போனில் பொருத்தக்கூடிய கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

  அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் இரண்டாம் நிலை கேமராவாக 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் மேக்ரோ லென்ஸ் இடம்பெற்றிருக்கிறது. இயற்கை ஒளி இருந்தால் சிறந்த புகைப்படங்களை இதில் பதிவு செய்யலாம். அதேபோல் இந்த விலைப்பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களைவிட சிறந்த தரத்தில் புகைப்படங்களை இதில் பதிவு செய்ய முடியும்.

  ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதுவும் பாராட்டத்தக்க ஒரு விஷயமாகும்.

  லாவா ப்ளேஸ் ப்ரோ சிப்செட்

  லாவா ப்ளேஸ் ப்ரோ சிப்செட்

  லாவா ப்ளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ள அம்சங்களை இயக்க இந்த சிப்செட் ஏதுவாக இருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் கிடைக்கிறது.

  லாவா ப்ளேஸ் ப்ரோ பேட்டரி ஆயுள்

  லாவா ப்ளேஸ் ப்ரோ பேட்டரி ஆயுள்

  Lave Blaze Pro ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றிருக்கிறது. மிதமான பயன்பாட்டில் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் இரண்டு நாட்கள் வரை நீடித்தது. முன்னதாக குறிப்பிட்டது போல் இதில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு இந்த வேகம் மிகவும் குறைவானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

  வாங்கலாமா? வேண்டாமா?

  வாங்கலாமா? வேண்டாமா?

  கேமிங் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுக்கு இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்டதாக இருக்கிறது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 50 எம்பி கேமரா என பல அம்சங்கள் உயர்ந்ததாக இருக்கிறது. ரூ.10,000 விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Lava Blaze Pro Review: Here's a review of Rs 12,000 range india Product smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X