ரூ.9,999 மட்டுமே.. 50MP டிரிபிள் கேமரா உடன் அறிமுகமான Lava Blaze Pro!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டை சேர்ந்தது தான். இருப்பினும் உள்நாட்டு நிறுவனங்கள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை கவரும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.

கம்மி விலையில் அதீத அம்சங்கள்

கம்மி விலையில் அதீத அம்சங்கள்

லாவா நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமிக்கும் முயற்சியில் அதீத அம்சங்களுடன் கம்மி விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது Lava Blaze Pro ஆகும்.

லாவா நிறுவனம் இந்தியாவில் Lava Blaze Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி இணைப்புடன் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது HD+ தெளிவுத்திறனுடன் கூடிய 6.5 இன்ச் IPS டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 90Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவை இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

50 எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா

50 எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா

லாவா அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போனானது MediaTek Helio G37 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி ஏஐ டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

Lava Blaze Pro விலை

Lava Blaze Pro விலை

லாவா ப்ளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது.

இதன் விலை ரூ.10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப கால சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 என கிடைக்கிறது.

இதில் 32ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படை மாறுபாட்டின் விலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புதிய ஸ்மார்ட்போனை எங்கு வாங்கலாம்

லாவாவின் புதிய ஸ்மார்ட்போனை லாவா அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மூலமாக வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனானது கிளாஸ் ப்ளூ, கிளாஸ் க்ரீன் கோல்ட், கிளாஸ் க்ரீன் மற்றும் கிளாஸ் ஆரஞ்ச் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் Lava Blaze Pro விற்பனை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Lava Blaze Pro சிறப்பம்சங்கள்

Lava Blaze Pro சிறப்பம்சங்கள்

Lava Blaze Pro சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. HD+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.5-இன்ச் 2.5D வளைந்த IPS டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

MediaTek Helio G37 SoC சிப்செட் ஆதரவு

MediaTek Helio G37 SoC சிப்செட் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 720x1,600 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் வசதியுடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டா-கோர் MediaTek Helio G37 SoC மூலம் இயக்கப்படுகிறது.

ப்ரோ மாடலின் கேமரா அம்சங்கள்

ப்ரோ மாடலின் கேமரா அம்சங்கள்

ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் எல்இடி ஃப்ளாஷ் உடன் கூடிய 50 எம்பி டிரிபிள் ரியர் ஏஐ கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் மேக்ரோ மற்றும் போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆதரவும் உள்ளது.

இதன் பின்புற கேமரா அமைப்பானது அழகு முறை, எச்டிஆர் முறை, நைட் முறை, பனோரமா பயன்முறை என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு

ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது.

குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இப்படி பல அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைவு தான்.

இதுபோன்ற இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அனைவரின் கடமை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Lava Blaze pro launched with 50MP triple rear cameras at Rs 10,499

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X